
ஹாங்காங் ‘இலக்கிய வட்ட’த்தின் 25ஆம் கூட்டம் ஜூலை 13, 2008 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் அதற்கு முன்பு வரை நடந்த 24 கூட்டங்களின் பதிவுகள் அடங்கிய நூல் ‘இலக்கிய வெள்ளி’ வெளியிடப்பட்டது.
நூலைப் பற்றி

ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக் களைப் பகிர்ந்து கொள்வதே வட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். மேலும் பிற மொழி இலக்கியங்களைக் குறித்தும், வாழ்வனுபவங்களைக் குறித்தும் பல கூட்டங்கள் நடந்துள்ளன. ஜீலை 2008இல் வட்டத்தின் 25ஆம் கூட்டம் நடை பெற்றது. இலக்கிய வட்டக் கூட்டங்களில் நவீனத் தமிழ் இலக்கியப் படைப் புகளும் பழந்தமிழ் படைப்புகளும் ஆய்வு செய்யப்படுகின்றன; பிறமொழி இலக்கியம், திரைப்படம், நாடகம், இசை, இணையம், இதழியல், நிழற்படம், ஓவியம், நாட்டியம், வாழ்வனுபவம், புலம் பெயர் வாழ்க்கை என்று பலவும் பேசு பொருளாக இருந்து வருகின்றன. இலக்கிய வட்டக் கூட்டங்கள், ஹாங்காங் சூழலில் இலக்கிய ஈடுபாட்டையும், வாழ்வியல் அக்கறையையும்,செழுமையான விமர்சனக் கலாச்சாரத்தையும் வளர்த்தெடுப்பதில் உதவி வருகின்றன. அவற்றைப் பதிவு செய்து ஆவணமாக்குதலில் முதல் படி இது. இந்த நூலில் வட்டம் நடத்திய 24 கூட்டங்களின் பதிவுகள் இடம் பெறுகின்றன.
*************************************
“இலக்கிய வெள்ளி”
(ஹாங்காங் இலக்கிய வட்டம் நடத்திய 24 கூட்டங்களின் பதிவுகள்)
தொகுப்பு: மு. இராமனாதன்
வெளியீடு:Tamil Literary Circle
TST Post Box 91221, Hong Kong
ISBN 978-988-17729-1-6