புதிதாய்ப் படிக்க
ஹாங்காங் இலக்கிய வட்டம் துவங்கிய ஆண்டிலிருந்து அங்கு நடைபெற்ற இலக்கியக் கூட்டங்கள் பற்றிய தொகுப்பு. தற்காலத் தமிழிலக்கியம், சிறுகதைகள், திருக்குறள், தமிழ் நாடகங்கள், கவிதைகள், எழுத்தாளர்கள், அனுபவங்கள்..என பல பேசும் பொருள்களில் பல அறிஞர்களின் உரைகள் அமைந்துள்ளன. தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் நடத்தப்பட்ட 24 கூட்டங்களின் பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. கிரிகோரி ஜேம்ஸ், சாரதா நம்பி ஆரூரான், செ. முஹம்மது யூனூஸ் ஆகியோரின் சிறப்புரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலக்கிய வட்ட மடலாற்குழு வாயிலாக உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.
இலக்கிய வெள்ளி
ஹாங்காங் இலக்கிய வட்டம் நடத்திய 24 கூட்டங்களின் பதிவுகள்
தொகுப்பு: மு இராமனாதன்
இலக்கிய வட்டம், ஹாங்காங்
நன்றி: வார்த்தை