ஸ்டார்ட்-அப் திட்டம் பலன் தருமா?

எம்.அருணாச்சலம்

Published in The Hindu-Tamil, December 18, 2015

இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான தேவை இருக்கிறது

ஜனவரி 16 அன்று பிரதமர் மோடி ஸ்டார்ட்அப் திட்டத்தைத் துவக்கப்போகிறார்இதற்கு ‘ஸ்டார்ட்அப் இந்தியாஸ்டாண்ட்அப் இந்தியா’ (தொடங்கிடு இந்தியாஎழுந்து நில் இந்தியாஎன்று பெயர் சூட்டியிருக்கிறார்இந்த நிகழ்ச்சிக்கு உலகெங்குமிருந்து 200-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைவர்கள் டெல்லிக்கு வருகிறார்கள்ஸ்டார்ட்அப் என்று எதைச் சொல்கிறார்கள்இந்தத் திட்டத்தால் இந்தியா எழுந்து நிற்குமா?

இன்று முன்னணியில் விளங்கும் ஃபேஸ்புக்கூகுள்ஆப்பிள்டிவிட்டர் போன்ற பல நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டார்ட்அப் அமைப்புகளாக ஆரம்பிக்கப்பட்டவைதான்தொடக்கத்தில் ஸ்டார்ட்அப் என்பது ஒரு கருத்துருவாக (idea) இருக்கும்அதைப் புதிய வழியில்புதிய முறையில் (innovation) ஒரு திட்டமாக உருவாக்க வேண்டும்இந்தக் கருத்துருவை முன்வைப்பவர்கள்தான் இதை வணிகரீதியில் வெற்றி பெறத்தக்க திட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும்அவர்கள் மக்களின் தேவைகளை அறிந்திருக்க வேண்டும்எதிர்காலம் குறித்த தீர்க்கதரிசனமும் வேண்டும்இந்தக் கருத்தை அவர்கள் யாருக்கும் கை மாற்றிக் கொடுக்க முடியாதுஒரு திட்டமாக உருப்பெற்ற பின்புதான் பலருக்கும் இதன் பயன்பாடு புரியவரும்ஆகவேஇந்தக் கருத்தை மட்டும் யாரும் விலை கொடுத்து வாங்க மாட்டார்கள்இது ஒரு பிரசவம் மாதிரிகருவுற்ற பெண்தான் பிள்ளை பெற்றாக வேண்டும்திட்டமாக உருப்பெற்ற பின்னர் அதைச் சந்தைக்குக் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தும்போது கருத்தை உருவாக்கியவர்களே நிறுவனத்துக்குத் தலைமை தாங்குவார்கள்அல்லது முக்கியப் பொறுப்பு வகிப்பார்கள்ஆகவேஇது தனி மனிதர்களின் திறனைப் பெரிதும் சார்ந்திருக்கிறதுஇந்தத் திறமைசாலிகளுக்கு நிதி வேண்டும்கருத்து திட்டமாக உருப்பெறும்போது குறைவான நிதி வேண்டும்நிறுவனமாகி சந்தைப் படுத்தும்போது அதிகமான நிதி வேண்டும்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பம் சார்ந்தவை மட்டுமல்லசுற்றுலாசுகாதாரம்மருத்துவம்விவசாயம்உயிரியில்சில்லறை வணிகம் போன்ற துறைகளில் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வெற்றிகரமாக சேவையாற்றி வருகின்றன.

ஹாங்காங்

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குப் பல நாடுகளின் அரசாங்கங்கள் உதவிவருகின்றனஉதாரணமாகஹாங்காங் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்கிறதுஹாங்காங்கில் அறிவியல் பூங்கா என்கிற இடத்தில் உள்கட்டமைப்பு வசதிகளும் ஆய்வுக்கூடங்களும் உள்ளனஇங்கே ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அலுவலகம் அமைத்துக்கொள்ளலாம்அவர்களது கருத்துரு ஒரு திட்டமாக உருவாகும் வரை நிதியுதவியும் கிடைக்கும்பல்கலைக்கழகங்களும் தொழில்நுட்ப ரீதியில் உதவும்இன்வெஸ்ட்மெண்ட் ஹாங்காங் என்கிற வர்த்தகத்தை ஊக்குவிக்கிற அமைப்பில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்காகவே தனிப் பிரிவு இருக்கிறதுஇந்தப் பிரிவு முதலீட்டாளர்களிடம் திட்டத்தைக் கொண்டு சேர்க்கும்.

சீனா

ஹாங்காங் சந்தை சிறியதுஆனால்சீனாவின் சந்தை இந்தியாவைப் போலவே பெரியதுஉற்பத்தித் துறையிலும் கணினி வன்பொருளிலும் சீனா முன்னணி வகிக்கிறதுமென்பொருளில் முன்னேறி வருகிறதுஇந்தப் பின்புலத்தோடு ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறதுஹாங்காங்குக்கு வெகு அருகில் உள்ள நகரம் ஷென்ஜன்கடந்த ஐந்தாண்டுகளில் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ந்திருக்கின்றனஅவற்றுள் இரண்டு பிரபலமானவைவீசாட்டி.ஜே..

வீசாட் உடனடித் தகவல் பரிமாற்ற சேவைசீனாவின் இணைய விதிகளுக்கு உட்பட்டு 2010-ல் தொடங்கப்பட்டதுவங்கிச் சேவைகளுக்குக்கூட நம்பிக்கையோடு பயன்படுத்தப்படுகிறதுஇன்று உலகளவில் 10 கோடிப் பேர் இதன் உறுப்பினர்கள்.

டி.ஜே. டிரோன் (drone) வகைப்படும் தானியங்கி கேமராக்களைத் தயாரிக்கிறதுரிமோட்டில் இயக்கலாம்ராணுவத்தில் மட்டும் பயன்படுத்திய மாதிரியை எடுத்துக்கொண்டுஎளிமைப்படுத்திசிவில் சமூகத்தின் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர் பிராங் வாங்ஹாங்காங்கில் அறிவியல் படித்தார். 2006-ல் ஸ்டார்ட்அப் நிறுவனமாக ஷென்ஜனில் தொடங்கினார்இப்போது ரூ.10,000 முதல் ரூ.20 லட்சம் வரை விதவிதமான டிரோன்கள் தயாரிக்கிறார்இந்த டிரோன்களுக்குப் பயன்பாடு அதிகம்இயற்கைப் பேரிடரின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளைப் படம் எடுக்கும்அடர்ந்த காடுகள்பனிப் பிரதேசங்கள்பூமிக்கு அடியில் என்று மனிதர்கள் போக முடியாத பகுதிகளுக்குச் சென்று படமெடுத்து ஸ்மார்ட்போனுக்கு அனுப்பிவிடும்.

இந்தியா

இந்தியாவிலும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றனஃபிளிப்கார்ட்ஸ்நாப்டீல் போன்றவை ஆன்லைன் வணிகத்துக்குப் பெயர் பெற்றவைமேக்மைடிரிப் விமானபேருந்துப் பயணங்களுக்கும் விடுதிகளுக்கும் முன்பதிவு செய்கிறதுஇன்மோபி ஸ்மார்ட்போனில் விளம்பரம் செய்கிறதுஓலா வாடகை கார் சேவை வழங்குகிறதுஇந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை எப்படி ஊக்குவிக்கலாம்?

நமது அரசு அதிகாரிகள் ஸ்டார்ட்அப் கருத்துக்களைப் பரிசீலித்து அவர்களுக்கு உதவுவதற்கான பயிற்சி பெற்றவர்களில்லைஇந்தப் பணியில் பல்கலைக்கழகங்களை ஈடுபடுத்தலாம்..டி..எஸ்.சிஅண்ணா பல்கலைக்கழகம் போன்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களையும்மேலும் நல்ல உள்கட்டமைப்பு உள்ள மருத்துவக் கல்லூரிகள்அறிவியல் கல்லூரிகளையும் ஈடுபடுத்தலாம்இங்கெல்லாம் புதிய கட்டிடங்கள் கட்டி ஸ்டார்ட்அப் கருத்தாளர்களுக்கு இடம்தகவல் தொடர்புஆய்வுக்கூடம் போன்றவற்றை வழங்கலாம்மாநில அரசுகள் இதில் பெரும்பங்கு வகிக்க முடியும்.

நமது வங்கிகளுக்குஇப்படியான கருத்தாளர்களுக்கு நிதி வழங்குவதிலும் அவர்களது திட்டங்களை மதிப்பிடுவதிலும் சிரமம் இருக்கும்திட்டங்களுக்கேற்ப கடனாகவோ மானியமாகவோ நிதி வழங்குகிற பொறுப்பையும் கல்வி நிறுவனங்களுக்கே வழங்கலாம்எல்லா ஸ்டார்ட்அப் கருத்துருக்களும் வெற்றிகரமான திட்டங்களாக உருப்பெறாதுகணிசமானவை தோல்வி அடையும்நிதி ஒதுக்கும்போது இதையும் கணக்கில் கொள்ள வேண்டும்மேலும்ஒரு கருத்துரு சந்தைக்கு வருவதற்குக் காலக்கெடு விதிக்க முடியாதுகருத்தைப் பொறுத்துகிடைக்கும் வசதிகளைப் பொறுத்து கால அளவு மாறுபடும்இதையும் நிதி வழங்குவோர் மனதில் கொள்ள வேண்டும்.

அடுத்ததாகஅரசின் விதிமுறைகளும் ஸ்டார்ட்அப் திட்டங்களை ஊக்குவிக்கிற வகையில் இருக்க வேண்டும்சில ஸ்டார்ட்அப் திட்டங்கள் சந்தைக்கு வரும்போது பழைய விதிகள் பொருத்தமாக இருக்காதுஉதாரணமாகஹாங்காங்கில் இப்போது உபெர் எனப்படும் வாடகை கார் சேவை பிரபலமாகி வருகிறதுசொந்த காரும் ஓட்டுநர் உரிமமும் வைத்திருக்கிற இளைஞர்கள் பகுதி நேரமாக இதில் சேர விரும்புகிறார்கள்ஹாங்காங்கில் நடப்பில் இருக்கும் வாடகை கார் சட்டப்படி இதைச் செய்ய முடியாதுஅந்தச் சட்டங்களை எழுதியவர்கள் பின்னொரு காலத்தில் ஸ்மார்ட்போன் மூலம் பதிவுசெய்து வாடகை காரில் போக முடியும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்ஹாங்காங் அரசு இப்போது மக்களின் பாதுகாப்புக்குப் பழுதில்லாமல் சட்டத்தைத் தளர்த்துவது குறித்துப் பரிசீலித்துவருகிறது.

ஸ்டார்ட்அப் நிறுவனங்களால் மக்களுக்குக் கூடுதல் சேவையைக் குறைந்த விலையில் கொடுக்க முடியும்இந்தியாவில் அதற்கான தேவை இருக்கிறதுதிறமைசாலிகள் இருக்கிறார்கள்அவர்களுக்கு நிதியும் வழிகாட்டுதலும் அரசின் ஆதரவும் வேண்டும்இதில் கல்வி நிறுவனங்களும் அறிவியல் நிறுவனங்களும் சிறப்பான பங்காற்ற முடியும்பிரதமர் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான புதிய செயல்திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

(எம்அருணாச்சலம்ஹாங்காங் இந்திய வர்த்தகக் குழுமத்தின் தலைவர். 2005-ல் இந்திய அரசின் சிறந்த வெளிநாட்டு இந்தியருக்கான ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருது பெற்றவர்)

கேட்டு எழுதியவர்முஇராமனாதன்ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

Leave a comment