மு இராமனாதன் இது அசாதரணமானதுதான். ஓர் இலக்கிய அமைப்பு அரை நூற்றாண்டு காலமாகத் தொடச்சியாகச் செயல்பட்டு வருகிறது. அதிலும் தமிழ்நாட்டில். ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பு அகவை 50ஐ எட்டியிருக்கிறது. 1970இல் தொடங்கப்பட்டது இலக்கியச் சிந்தனை. ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாலையில் ஆழ்வார்பேட்டை சீனிவாச காந்தி மண்டபத்தில் நடைபெற்று வந்தன அமைப்பின் மாதந்திரக் கூட்டங்கள். தமிழ் வாசகர்கள் பலருக்கும் கிடைக்கக் கூடிய பருவ இதழ்களிலிருந்து அதற்கு முந்தைய மாதம் வெளியான சிறுகதைகளில் ஒன்றை ஒரு வாசக-விமர்சகர் தேர்ந்தெடுப்பார்.Continue reading “இலக்கியச் சிந்தனையின் பொன்விழா”
Category Archives: Articles
மியான்மார்: அரசியல், ராணுவம், தேர்தல்
Published in Kalachuvadu December 2020மியான்மார்: அரசியல், ராணுவம், தேர்தல்கட்டுரைமு. இராமனாதன் “ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது!”இது பராசக்தி (1952) படத்தின் நாயகன் நீதிமன்றத்தில் பேசும் வசனம். 68 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழர்களின் நினைவு அடுக்குகளுக்குள் தேங்கிக் கிடக்கும் வசனம். ரங்கூன் பர்மாவின் தலைநகராக விளங்கியது. இரண்டாம் உலகப் போருக்கு முன்புவரை தமிழ் வணிகர்களையும் தொழிலாளர்களையும் அரவணைத்த தேசம் பர்மா. இன்று எல்லாம் மாறிவிட்டது. பர்மா, மியான்மார் ஆகிவிட்டது. ரங்கூன், யாங்கூன் ஆகிவிட்டது.Continue reading “மியான்மார்: அரசியல், ராணுவம், தேர்தல்”
இந்தியாவின் புதிய முன்மாதிரிகள்: வங்கதேசமும் வியட்நாமும்
மு. இராமனாதன் Published in Kalachuvadu November 2020 அக்டோபர் மூன்றாம் வாரத்தில் இந்திய ஊடகங்களில் வங்கதேசத்தின் பெயர் தொடர்ந்து இடம்பிடித்தது. முன்பெல்லாம் வங்கதேசத் தொழிலாளர்கள் இந்திய எல்லையை அத்துமீறிக் கடந்தார்கள் என்கிற ரீதியிலான செய்திகள்தான் வரும். இந்தமுறை முற்றிலும் மாறான காரணத்துக்காக வங்கதேசம் செய்திகளில் வலம்வந்தது. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட உலகப் பொருளாதார அறிக்கைதான் இதற்குக் காரணம். நடப்பு நிதியாண்டில் வங்கதேசப் பொருளாதாரம் 3.80% வளர்ச்சி அடையும் என்று நிதியம் கணித்திருக்கிறது. இது கொரோனாக்Continue reading “இந்தியாவின் புதிய முன்மாதிரிகள்: வங்கதேசமும் வியட்நாமும்”
தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்?
Published in Kalachuvadu October 2020 மு. இராமனாதன் ஆதியில் பான் (PAN) அட்டை வந்தது. அதை ஒன்றிய அரசு தயாரித்துக் கொடுத்தது. அடுத்து ஆதார் அட்டை வந்தது. அதைத் தயாரிக்கிற பணி சில உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு புலர்காலைப்பொழுதில் அட்டைகள் இரண்டையும் இணைக்கச் சொல்லி ஆக்ஞை வந்தது. காஷ்மீர் முதல் திருப்பதிவரை புகார் ஒன்றுமில்லை. குடிமக்கள் இணைத்தனர். ஆனால் திருத்தணிமுதல் தென்குமரிவரை வாழும் ஜீவராசிகளுக்கு அட்டைகளை ஒட்டவைப்பது எளிதாக இல்லை. பான் அட்டை விண்ணப்பத்தில்Continue reading “தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்?”
வண்ணநிலவன்: வாசனைகளால் நிரம்பிய உலகம்
மு. இராமனாதன் Published in Kalachuvadu August 2020 வண்ணநிலவனின் படைப்புலகம் நாவல்களாலும் சிறுகதைகளாலும் கொஞ்சம் கவிதைகளாலும் உருவானது. அதில் கட்டுரைகளுக்கும் இடமுண்டு. அவரது எல்லாப் படைப்புகளும் எளிய மனிதர்களைச் சுற்றி வருவன; அவர்களது வாசனைகளால் நிரம்பியிருப்பன. கடல்புரத்தில் வண்ணநிலவனின் முதல் நாவல் ‘கடல்புரத்தில்’ 1977இல் வெளியானது; அந்த ஆண்டின் ‘இலக்கியச் சிந்தனை’ விருதினையும் பெற்றது. மீனவர்களைப் பற்றி அதற்கு முன்னால் இத்தனை நம்பகமான நாவல் வந்ததில்லை. குருஸ் மிக்கேல் ஒரு பரதவன், அவன் மனைவி மரியம்மை,Continue reading “வண்ணநிலவன்: வாசனைகளால் நிரம்பிய உலகம்”
வைரஸின் முன் அனைவரும் சமம்; சிலர் மற்றவர்களைவிடக் கூடுதல் சமம்
கட்டுரை மு. இராமனாதன் Published in Kalchuvadu, June 2020 பலரும் சொல்லி வருகிறார்கள்: இந்த வைரஸ் பேதம் பார்ப்பதில்லை. உயர்ந்தவன் x தாழ்ந்தவன், பெரியவன்x சிறியவன், நல்லவன் x கெட்டவன், உள்ளவன் x இல்லாதவன் எல்லோரும் அதற்கு ஒன்றுதான். உண்மைதான்போல. மார்ச் 27 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், ஒரு காலத்தில் சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன். ஏப்ரல் 6 அன்று அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு ஒரு வாரம்Continue reading “வைரஸின் முன் அனைவரும் சமம்; சிலர் மற்றவர்களைவிடக் கூடுதல் சமம்”
அற்றைத் திங்கள் சார்ஸின் பிடியில்
கட்டுரை மு. இராமனாதன் Published in Kalchuvadu, May 2020 அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’ பாரி மகளிர் அங்கவையும் சங்கவையும் பாடிய பாடல். “அன்று வந்ததும் இதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா. அன்று எங்கள் தந்தை வேள் பாரி இருந்தார். பறம்புமலை எம்மிடம் இருந்தது. இன்று எங்கள் மலை எம்மிடம் இல்லை, எங்கள் தந்தையும் இல்லை.” புறநானூறு தெரிந்திருந்தால் ஹாங்காங் மக்களும் இந்தப் பாடலை இப்போது பாடியிருப்பார்கள். ஆனால், மூலப் பாடலைத் திருப்பிப் போட்டிருப்பார்கள்.Continue reading “அற்றைத் திங்கள் சார்ஸின் பிடியில்”
தாய் மொழியில் ஆரம்பக் கல்வியைப் படிப்பதே சிறந்தது… ஹாங்காங் தமிழ்ப் பொறியாளர் பேச்சு
ஹாங்காங் தமிழ்ப் பொறியாளர் பேச்சு Published in One India, 1 September 2016 தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஹாங்காங் நாட்டில் பொறியாளராகப் பணியாற்றி வரும், தமிழ்ப் பிரமுகர் மு. இராமனாதன் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவர் சஞ்சீவ் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஹாங்காங் நாட்டில் பதிவு பெற்ற பொறியாளராக 20 வருடங்களாகப் பணியாற்றி வருபவரும், சுரங்கContinue reading “தாய் மொழியில் ஆரம்பக் கல்வியைப் படிப்பதே சிறந்தது… ஹாங்காங் தமிழ்ப் பொறியாளர் பேச்சு”
சர்வதேச சினிமா: இவர்களின் அலைதல் எழுத்தில்கூடப் பதிவாகவில்லை—“தீபன்”
மு. இராமனாதன் Published in The Hindu-Tamil, February 26, 2016 ஹாங்காங்கில் தற்போது ‘தீபன்’ ஓடிக்கொண்டிருக்கிறது. மே 2015-ல் நடந்த கான்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான தங்கப் பனை விருதை வென்ற படம் இது. அப்போது ஹாங்காங் நாட்டின் நாளிதழான ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட், தீபனாக நடித்த அந்தோணிதாசன் ஹாங்காங்கில் ஆறு மாதங்கள் அகதியாக வாழ்ந்தவர் என்று எழுதியிருந்தது. அது 1988-ம் ஆண்டு. முன்னாள் போராளியான அவருக்கு அப்போது வயது 19. பிரான்ஸில் 1993-ல் தஞ்சம் புகுந்த அந்தோணிதாசனின் புனைபெயர் ஷோபாசக்தி என்றும், அவர் தமிழில் சிறுகதைகளும் நாவல்களும் கட்டுரைகளும் எழுதிவருகிறார் என்றும் குறிப்பிட்டிருந்தது நாளிதழ். இப்போது வாசகர்களின் பரவலான பாராட்டுக்களைப் பெற்றுவருகிற அவரது ‘Box- கதைப் புத்தகம்’ என்ற நாவல் அப்போது வெளியாகவில்லை. ‘தீபன்’ படத்தின் இயக்குநர் ஜாக் ஒதியார் சர்வதேசத் திரையுலகில் அறியப்பட்டவர். இவரது முந்தைய படங்களான ‘A Prophet’, ‘Rust and Bone’ ஆகியவையும் விருதுகளைக் குவித்தவை. போராளியின் கதை சிவதாசன் ஒரு முன்னாள் போராளி. அவனது புதிய பெயர்தான் தீபன். அவனுக்குக் கிடைக்கிற கடவுச் சீட்டிலுள்ள பெயர். இளம் பெண்ணான யாழினியும் (காளீஸ்வரி), 9 வயதுச் சிறுமியான இளையாளும் (குளோடின்) படத்தின் பிற பிரதான பாத்திரங்கள்; அந்தப் பெயர்களும்கூட அவர்களது சொந்தப் பெயர்களல்ல. கள்ளக் கடவுச்சீட்டில் உள்ள பெயர்கள். மூவரும் ஒருவருக்கொருவர் அந்நியர்கள். மூவரும் தத்தமது குடும்பங்களை யுத்தத்தில் இழந்தவர்கள். இப்போது ஒரே குடும்பமாக அபிநயிக்கிறார்கள். அகதிக் கோரிக்கையோடு பிரான்ஸில் தஞ்சம் அடைகிறார்கள். கொஞ்ச நாட்களில் தீபனுக்குப் புறநகர் ஒன்றின் தொகுதி வீட்டில் பராமரிப்பாளானாக வேலை கிடைக்கிறது. இளையாள் முதன்முதலாகப் பள்ளிக்குப் போகிறாள். யாழினிக்கும் ஒரு வீட்டில் பணிப்பெண் வேலை கிடைக்கிறது. மெல்ல மெல்ல ஒரு குடும்பமாக வாழத் தலைப்படுகிறார்கள். அப்போது அந்தக் கட்டிடத் தொகுதியில் இயங்கிவரும் போதைப்பொருள் மாபியாக்களிடையே மோதல் ஏற்படுகிறது. தீபன் அதற்குள் இழுபடுகிறான். அவன் அடக்கி வைத்திருந்த, அவனுள் கனன்றுகொண்டிருந்த வன்முறை வெளிப்படுகிறது. அகதிகள் சமாதானத்தையே நேசிக்கிறார்கள் என்றுதான் படம் முடிகிறது. உயிர் தரித்திருப்பதற்கும் பிழைத்திருப்பதற்கும்தானே அவர்கள் இத்தனை பாடு படுகிறார்கள்? புலம்பெயர்வும் அலைந்துழல்வும் 1983 கலவரத்துக்குப் பிறகு இலங்கைத் தமிழர்கள் புலம்பெயரத் தொடங்கினார்கள். இன்று ஐரோப்பிய நாடுகளிலும் கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் 10 லட்சம் இலங்கைத் தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் பலரும் திரவியம் தேடிப் போனவர்களில்லை. புதிய மண்ணில் கால் பதிக்கும்போது அவர்கள் கையிருப்பிலுள்ள காசு குறைவு; அவர்களுக்குத் தெரிந்த ஆங்கிலச் சொற்களும் குறைவு. போதிய கம்பளியாடை இல்லாத அவர்களைக் குளிரும் பனியும் வாட்டும். புதிய கலாச்சாரமும், புரியாத மொழியும் அவர்களைச் சுற்றிக் காற்றில் கலந்திருக்கும் கசப்புணர்வும் மேலதிகமாக வாட்டும். இவர்களின் அலைதல் எழுத்தில்கூட அதிகம் பதிவாகவில்லை. திரைப்படங்களில் அபூர்வம். ஆதலால், இந்தப் படம் வாராது போல் வந்த மாமணி. சர்வதேசத் தமிழ்ப் படம் படத்தில் பிரெஞ்சுப் பாத்திரங்கள் பிரெஞ்சிலும் தமிழ்ப் பாத்திரங்கள் தமிழிலும் பேசுகிறார்கள். படத்தில் மிகுதியும் தமிழ்தான் கேட்கிறது. ஹாங்காங்கில் ஆங்கில, சீன மொழி சப்டைட்டிலுடன் படம் திரையிடப்படுகிறது. படம் உலகெங்கிலுமுள்ள பார்வையாளர்களை மனதில் கொண்டுதான் தயாரிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், தமிழ் அறிந்தவர்களால் பல காட்சிகளை நெருக்கமாக உணர முடியும். ‘பாலும் தெளிதேனும், ‘நிலா அது வானத்து மேலே’ போன்ற பாடல்களைப் பாத்திரங்கள் பாடுகிறபோது, அவை ஒரு தமிழ்ப் பார்வையாளருக்கு, அவற்றின் மீது படிந்திருக்கும் காலத்தின் தூசியோடு வந்து சேர்கின்றன. தமிழ் தெரியாத இயக்குநர் – கதாசிரியரின் நுண்ணுணர்வு வியப்பூட்டுகிறது. படத்தில் பேசாத தருணங்களும் ஏராளமுண்டு. ஒரு காட்சியில் தீபன் முள்ளிவாய்க்காலில் படுகாயமுற்றவர்களின் படங்களைப் பார்த்துக்கொண்டிருப்பான். எவ்விதமான முகபாவமும் இல்லை. எந்த வசனமும் இல்லை. படத்தில் அரசியல் காட்சிகள் குறைவுதான். அகதிகளின் அலைச்சல்தான் படத்தின் மையம். தீபன் தற்போது ஹாங்காங்கில் வெளியாகி இரண்டு திரையரங்குகளில் ஓடுகிறது. படத்துக்கு ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ எழுதிய விமர்சனத்தில் இப்படிக் குறிப்பிட்டிருந்தது: ‘மூன்று அகதிகளும் புதிய உலகில் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்காகப் படுகிற அல்லல்கள், அவர்கள் கைவிட்டுவிட்டு வந்த பூமியில் அவர்களுக்கு நேர்ந்த துயரங்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவையல்ல’. படம் இங்கிலாந்தில் இவ்வாண்டு ஏப்ரலில் வெளியாகும். அமெரிக்காவிலும் கனடாவிலும் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்தியாவிலும் விரைவில் வெளிவரலாம். மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர் தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
ஹாங்காங் தமிழ் வகுப்பு- வானொலி நிகழ்ச்சி
மு. இராமனாதன் Published in Solvanam, 26/01/2016 (ரேடியோ ஹாங்காங் சிறுபான்மை தேசிய இனங்களுக்காக நடத்திய நிகழ்ச்சியில் 26.9.15 அன்று ஒலிபரப்பானது) சுதா ரவி: வணக்கம் நேயர்களே. ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் வழங்கிவரும் ரேடியோ ஹாங்காங் தமிழோசை நிகழ்ச்சியில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். கவிதா மோகன்: வணக்கம் நேயர்களே. இன்றைய நிகழ்ச்சியில் ஹாங்காங்கில் நடந்து வரும் தமிழ் வகுப்பைப் பற்றிப் பேசப் போகிறோம். கூடவே தமிழ் வகுப்பு மாணவர்கள் அவர்களுடைய பாடப்புத்தகத்திலிருந்து சில தமிழ்க் கவிஞர்களைப் பற்றியும் சொல்லப்Continue reading “ஹாங்காங் தமிழ் வகுப்பு- வானொலி நிகழ்ச்சி”