மக்கள் தொகை: சீனத்தின் நிலை

மு. இராமனாதன் First published in Dinamani on Wednesday March 23, 2005 நீண்டகாலமாக மக்கள்தொகையில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் இருந்து வருகிறது இந்தியா. சமீபத்தில் வெளியான 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை 102.7 கோடி (தற்போதைய மதிப்பீடு 107 கோடி). ஆயின், இந்தியாவின் மக்கள்தொகை சீனாவைவிட இரண்டரை மடங்கு அடர்த்தியானது. 96 லட்சம் சதுர கிலோமீட்டர் பரந்து கிடக்கும் சீனாவில், சராசரியாக ஒவ்வொரு ச.கிமீ பரப்பிலும் 135 பேர் வாழும்போது, இந்தியாவின்Continue reading “மக்கள் தொகை: சீனத்தின் நிலை”

ஹாங்காங்கில் தமிழ்க் கல்வி

மு இராமனாதன் First published in Thinnai on Sunday February 6, 2005 கதிஜா ஹாங்காங்கின் ஆரம்பப் பள்ளியொன்றில் இரண்டாம் வகுப்புப் படிக்கிறாள். ஓராண்டுக்கு முன்பு வரை இவளது சனிக்கிழமைகள் வெகு சாவதானமாகவே விடியும். பகல் பொழுது, வீடியோ விளையாட்டும் தொலைக்காட்சிக் கார்ட்டூனுமாய் சோம்பல் முறித்தபடி நகரும். மதிய உணவு வேளை மூன்று மணிக்குத்தான் வரும். ஆனால் இப்போதெல்லாம் கதிஜா சனிக்கிழமை காலையில் வீட்டுப்பாடம் எழுதத் தொடங்கி விடுகிறாள்; உச்சிப் பொழுது உணவு வேளை; இரண்டுContinue reading “ஹாங்காங்கில் தமிழ்க் கல்வி”

சுனாமி: அழிவில் துலங்கிய ஹாங்காங் முகம்

மு இராமனாதன் First published in Thinnai on Thursday January 13, 2005 இந்துமாக் கடலாழத்திலிருந்து சீறிப் புறப்பட்ட அலைகள் திக்குகளெட்டுஞ் சிதறியது. மனித உயிர்களின் எண்ணிக்கை ஆயிரங்களிற் தொடங்கி, பதினாயிரங்களாய்ப் பெருகி, இலட்சத்தைத் தாண்டிப் புள்ளி விவரங்களிற் புதைந்து போனது. மனித எத்தனங்களின் அபத்தமும், வாழ்வின் அற்பமும் புலனாயின. உலக நாடுகளின் உதவிக் கரங்கள் நீண்டன. ஹாங்காங் அரசும் இந்தப் பட்டியலில் இணைந்து கொண்டது. ஆனால் ஹாங்காங் இன்று தனித்து நிற்பது அதன் மக்களின்Continue reading “சுனாமி: அழிவில் துலங்கிய ஹாங்காங் முகம்”

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் ஹாங்காங் தேர்தலும்

மு இராமனாதன் First published in Thinnai on Thursday October 14, 2004 ஹாங்காங்கில் செப்டம்படர் 12 நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ (proportional representation-PR) முறைப் பின்பற்றப்பட்டது. இந்த முறையை ஆதரித்தும் எதிர்த்தும் ஜனநாயக நாடுகளில் குரல்கள் ஒலித்தவண்ணம் இருக்கின்றன.ஹாங்காங் தேர்தலையும் அதன் முடிவுகளையும் பரிசீலிப்பது PR முறையின் சாதக பாதகங்களை நெருங்கிப் பார்க்க உதவும். இந்தியா உட்படப் பல ஆசிய நாடுகளிலும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்கு நாடுகளிலும் ‘நேரடி ‘த்Continue reading “விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் ஹாங்காங் தேர்தலும்”

ஹாங்காங்கின் ஜனநாயகக் கிரணங்கள்

மு இராமனாதன் First published in Thinnai on Thursday, October 14, 2004 நிதி, வணிகம் மற்றும் கப்பற் போக்குவரத்தின் உலகத்தரமிக்க மையம் என்றே ஹாங்காங் பொதுவாக அறியப்படுகிறது. இன்னும் சிலருக்கு நெடிதுயர்ந்த நவீனக் கட்டிடங்கள் நிரம்பிய சுற்றுலாத் தலம். இப்போது ஜனநாயகத்தின் வைகறைக் கிரணங்கள் புலப்படத் தொடங்கியிருக்கிறது. கடந்த செப்டம்பர் 12 நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலைக் கவனிக்க சர்வதேசப் பார்வையாளர்கள் நகருக்கு வந்தனர். ஹாங்காங் சீனக் குடியரசின் ஒரு பகுதியாய் இருப்பதுதான் பலரின்Continue reading “ஹாங்காங்கின் ஜனநாயகக் கிரணங்கள்”

ஹாங்காங்கில் ஸார்ஸ்- எண்ணிக்கைகளுக்கு அப்பால்

மு இராமனாதன் First published in Thinnai on Saturday, May 10, 2003 ஹாங்காங்கில் ஸார்ஸ் (SARS-Severe Acute Respiratory Syndrome) என்கிற இருபத்தியோராம் நூற்றாண்டின் வைரஸ் தாக்குதல் தொடங்கி, இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நோயின் சாம்பல்துகள் படிந்த நாட்களில் ஹாங்காங்கின் சகல நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. நோயாளிகளின் எண்ணிக்கை பரபரப்பாகப் பேசப்படுகிறது. நோய்க்குப் பலியானோரின் எண்ணிக்கை அச்சுத்தாள்களில் கசிகிறது. சந்தேகமும் அச்சமும் மரணமும் பீதியும் புள்ளிவிவரக்கணக்குகளாக உலக நாக்குகளில் புரளும்வேளையில், இவற்றிற்கு அப்பால் சிலContinue reading “ஹாங்காங்கில் ஸார்ஸ்- எண்ணிக்கைகளுக்கு அப்பால்”

ஹாங்காங்கில் நடந்த ஈடிபஸ் நாடகம்

மு இராமனாதன் First published in Thinnai on Saturday, March 29, 2003 கரங்களை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி, மாட்சிமை பொருந்திய கிரேக்க மன்னன் ஈடிபஸ் சொல்கிறான்: ‘பெருங்குடி மக்களே! உலகம் புகழும் வேந்தனாகிய நானே நேரே வந்திருக்கிறேன் ‘. நாடகம் துவங்குகிறது. ஒரு ஆமையைப் போல் உடல் மடங்கி, சுயம் குத்திக் கொண்ட கண்களிலிருந்து குருதி வழிய அவனே சொல்கிறான்: ‘குற்றம் இழைத்தவன் நான்தான் என்று தெரிந்த பிறகும், மக்களை ஏறெடுத்துப் பார்ப்பதற்கா கண்கள்Continue reading “ஹாங்காங்கில் நடந்த ஈடிபஸ் நாடகம்”