அட்டன்பரோவின் திரைமொழி

மு இராமனாதன் Published in Thinnai.com, 9 February 2015 ஒரு சிலையையோ, நடனத்தையோ, ஓவியத்தையோ, கவிதையையோ ரசிப்பவர்கள் அதன் நுணுக்கங்களை ரசிக்கிறார்கள். எந்த இலக்கிய வடிவமும் உள்ளடக்கத்தைப் பார்க்கிலும் சொல்லப்படும் வகையினாலேயே சிறப்புப் பெறுகிறது. ஆனால் திரைப்படங்களில் மட்டும் அதன் அழகியலுக்குள் போகாது கதையோடு நின்று விடுகிறோம். இதற்குக் காரணம் ‘திரை மொழி’யில் தேற்சியில்லாமைதான். படிக்கத் தெரியாதவன் ஒரு சஞ்சிகையை எடுத்து எப்படிப் படங்களை மட்டும் பார்த்து விட்டு வைத்து விடுகிறானோ, அப்படித்தான் ரசிக்கத் தெரியாதவன் சினிமாவில்Continue reading “அட்டன்பரோவின் திரைமொழி”

வண்ணநிலவனின் தெரு

மு இராமனாதன் Published in Thinnai.com, 25 January 2015 செப்டம்பர் 1, 2002 அன்று ‘எழுத்தாளர்கள்’ என்ற தலைப்பில் ஹாங்காங் இலக்கிய வட்டம் நடத்திய கூட்டத்தில் பேசியது அன்பு நெஞ்சங்களுக்குத் தலை வணங்குகிறேன். இன்று வண்ணநிலவனின் ‘ரெயினீஸ் ஐயர் தெரு’வுக்குள் சென்று வரப்போகிறோம். அந்தத் தெருவில் வசிக்கும் எளிய மனிதர்களைச் சந்திக்கப் போகிறோம். அதற்கு முன்பாக வண்ணநிலவனோடு கை குலுக்கிக் கொள்வோம். வண்ணநிலவனை ஜனரஞ்சக வாசகர்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நல்ல படைப்புகளைத் தேடிப் படிக்கிற  வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும்.Continue reading “வண்ணநிலவனின் தெரு”

கடவுச் சொற்களும் வரிசை எண்களும்

மு. இராமனாதன் First published in Thinnai on March 6, 2011 இந்தக் கணினி யுகத்தில் தகவல்கள் எல்லாம் கையெட்டும் தூரத்தில் அல்லது கை சொடுக்கும் கால அவகாசத்தில் உள்ளன. ஆனால், அவற்றை அடைவதற்குக் காவலாக நிறுத்தப்பட்டிருக்கும் கடவுச் சொல்லை (password) முதலில் கடந்தாக வேண்டும். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால், நாங்கள் கோவை தொழில்நுட்பக் கல்லுரி(Coimbatore Institute of Technology- CIT) மாணவர்களாக இருந்தபோது உலகம் கணினிமயம் ஆகவில்லை. இணையம் உருவாகவில்லை. ஆதலால் கடவுச்Continue reading “கடவுச் சொற்களும் வரிசை எண்களும்”

அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்-5 -ஆ. இரா. வேங்கடாசலபதி

மு இராமனாதன் First published in Thinnai on March 20, 2009 ஆ. இரா. வேங்கடாசலபதி ஒரு தமிழறிஞரா? இந்த மண்ணில் பல தமிழறிஞர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள், பலர் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் எந்தத் தமிழ் மரபிலிருந்து வந்தவர்களோ, அதே மரபின் வழி வந்தவர்தான் வேங்கடாசலபதி . அவர்களெல்லாம் தமிழ் மொழியின் மீதும் தமிழ்ச் சமூகத்தின் மீதும் எந்த அளவிற்கு அக்கறையும் ஈடுபாடும் கொண்டிருந்தார்களோ, அதற்கு நிகரான அக்கறையும் ஈடுபாடும்  கொண்டவர். வேங்கடாசலபதி சென்னைContinue reading “அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்-5 -ஆ. இரா. வேங்கடாசலபதி”

தெய்வம் ஹாங்காங் வந்தது

மு இராமனாதன் First published in Thinnai on Thursday July 5, 2007 பிரம்மனுக்கு நான்கு தலைகள் மகிஷாசுரமர்த்தினிக்கு பதினாறு கரங்கள் கலியுகக் கடவுளுக்கோ கரங்கள் ஆயிரம். நல்லுலகிற்கு வெளியேயும் தமிழ் கூறப்படுவதை தெய்வம் அறியும். அவர்களை ஆட்கொள்வது தம் கடனென்றும். மாருதங்களையும் சமுத்திரங்களையும் தாண்டி சில நூறு கரங்கள் நீண்டன. திருக்கரமொன்று ஹாங்காங் வந்தது. பக்கத்து ஊர்களிலிருந்தும் பக்தர்கள் திரண்டனர். கோயில் வாசலில் தோரணங்கள் போஸ்டர்கள் தெய்வத்தின் படம் பொறித்த டி ஷர்டுகள் லட்சார்ச்சனைகள்.Continue reading “தெய்வம் ஹாங்காங் வந்தது”

இணையம்: பலவீனமான வலை

மு இராமனாதன் First published in Thinnai on Thursday, February 1, 2007 டிசம்பர் 27. கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு அலுவலகத்திற்கு வந்த லியுங் சீ விங் எப்போதும் போல் தன் கணினியைத் துவக்கினார். ஹாங்காங்கின் ஏற்றுமதி நிறுவனமொன்றில் பணியாற்றும் லியுங்கிற்கு, தென் கிழக்காசிய நாடுகளின் தகவல் தொழில்நுட்பம் பேரிடர் ஒன்றை நேரிடவிருக்கிறது என்பது அப்போது தெரியாது. அவருக்கு அன்று நிறைய வேலைகள் இருந்தன. இணையத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களின் நடப்பு விலையைப் பார்த்துவிட்டு, வட அமெரிக்காவில்Continue reading “இணையம்: பலவீனமான வலை”

தாய்லாந்து: அரசியலில் ராணுவம்

மு இராமனாதன் First published in Thinnai, Friday October 6, 2006 செப்டம்பர் 19, செவ்வாய்க்கிழமை. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. தாய்லாந்தின் தலை நகர் பாங்காக் வீதிகளில் பீரங்கி வண்டிகள் மெதுவாக முன்னேறின. அரசின் தலைமையகத்தையும் வானொலி-தொலைக்காட்சி நிலையங்களையும் வளைத்தன. ஒரு தோட்டா போலும் வெடிக்கவில்லை. ஒரு துளி ரத்தம்கூட சிந்தப்படவில்லை. ராணுவத் தளபதி சோந்தி பூன்யராட்கிளின் ஆட்சியைக் கைப்பற்றியதாக அறிவித்தார். 18 மாதங்களுக்கு முன்னர் இரண்டாவது முறையாக பெருவாரியான வாக்குகளைப் பெற்று பிரதமராகியிருந்தContinue reading “தாய்லாந்து: அரசியலில் ராணுவம்”

“ஹாங்காங் தமிழ்க் கல்வியின் மேன்மை அதன் தொடர்ச்சியில் இருக்கிறது”

மு இராமனாதன் First published in Thinnai on Thursday July 13, 2006 ஒரு வருடம் இருக்கும். நண்பர் ஒருவர் கேட்டார்: “திண்ணையில் படைப்புகளுக்குக் கீழ் எழுதியவரின் மின்னஞ்சல் முகவரி வருகிறதே, உங்களுக்கு யாரேனும் எழுதியிருக்கிறார்களா?”. நல்ல காலமாக ‘ஆம்’ என்று சொல்ல முடிந்தது. அதற்குச் சில நாட்கள் முன்னர்தான் “ஹாங்காங்கில் தமிழ்க் கல்வி” என்ற கட்டுரை வந்திருந்தது. ‘இளம் இந்திய நண்பர்கள் குழு’ எனும் அமைப்பினர் மிகுந்த பிரயத்தனங்களுடன் முறையான தமிழ் வகுப்புகளை ஹாங்காங்கில் நடத்துவதும், பிள்ளைகள்Continue reading ““ஹாங்காங் தமிழ்க் கல்வியின் மேன்மை அதன் தொடர்ச்சியில் இருக்கிறது””

ஹாங்காங்கில் தமிழ்க் கல்வி

மு இராமனாதன் First published in Thinnai on Sunday February 6, 2005 கதிஜா ஹாங்காங்கின் ஆரம்பப் பள்ளியொன்றில் இரண்டாம் வகுப்புப் படிக்கிறாள். ஓராண்டுக்கு முன்பு வரை இவளது சனிக்கிழமைகள் வெகு சாவதானமாகவே விடியும். பகல் பொழுது, வீடியோ விளையாட்டும் தொலைக்காட்சிக் கார்ட்டூனுமாய் சோம்பல் முறித்தபடி நகரும். மதிய உணவு வேளை மூன்று மணிக்குத்தான் வரும். ஆனால் இப்போதெல்லாம் கதிஜா சனிக்கிழமை காலையில் வீட்டுப்பாடம் எழுதத் தொடங்கி விடுகிறாள்; உச்சிப் பொழுது உணவு வேளை; இரண்டுContinue reading “ஹாங்காங்கில் தமிழ்க் கல்வி”

சுனாமி: அழிவில் துலங்கிய ஹாங்காங் முகம்

மு இராமனாதன் First published in Thinnai on Thursday January 13, 2005 இந்துமாக் கடலாழத்திலிருந்து சீறிப் புறப்பட்ட அலைகள் திக்குகளெட்டுஞ் சிதறியது. மனித உயிர்களின் எண்ணிக்கை ஆயிரங்களிற் தொடங்கி, பதினாயிரங்களாய்ப் பெருகி, இலட்சத்தைத் தாண்டிப் புள்ளி விவரங்களிற் புதைந்து போனது. மனித எத்தனங்களின் அபத்தமும், வாழ்வின் அற்பமும் புலனாயின. உலக நாடுகளின் உதவிக் கரங்கள் நீண்டன. ஹாங்காங் அரசும் இந்தப் பட்டியலில் இணைந்து கொண்டது. ஆனால் ஹாங்காங் இன்று தனித்து நிற்பது அதன் மக்களின்Continue reading “சுனாமி: அழிவில் துலங்கிய ஹாங்காங் முகம்”