இலக்கியச் சிந்தனையின் பொன்விழா

மு இராமனாதன் இது அசாதரணமானதுதான். ஓர் இலக்கிய அமைப்பு அரை நூற்றாண்டு காலமாகத் தொடச்சியாகச் செயல்பட்டு வருகிறது. அதிலும் தமிழ்நாட்டில். ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பு அகவை 50ஐ எட்டியிருக்கிறது. 1970இல் தொடங்கப்பட்டது இலக்கியச் சிந்தனை. ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாலையில் ஆழ்வார்பேட்டை சீனிவாச காந்தி மண்டபத்தில் நடைபெற்று வந்தன அமைப்பின் மாதந்திரக் கூட்டங்கள். தமிழ் வாசகர்கள் பலருக்கும் கிடைக்கக் கூடிய பருவ இதழ்களிலிருந்து அதற்கு முந்தைய மாதம் வெளியான சிறுகதைகளில் ஒன்றை ஒரு வாசக-விமர்சகர் தேர்ந்தெடுப்பார்.Continue reading “இலக்கியச் சிந்தனையின் பொன்விழா”

வண்ணநிலவன்: வாசனைகளால் நிரம்பிய உலகம்

மு. இராமனாதன் Published in Kalachuvadu August 2020 வண்ணநிலவனின் படைப்புலகம் நாவல்களாலும் சிறுகதைகளாலும் கொஞ்சம் கவிதைகளாலும் உருவானது. அதில் கட்டுரைகளுக்கும் இடமுண்டு. அவரது எல்லாப் படைப்புகளும் எளிய மனிதர்களைச் சுற்றி வருவன; அவர்களது வாசனைகளால் நிரம்பியிருப்பன. கடல்புரத்தில் வண்ணநிலவனின் முதல் நாவல் ‘கடல்புரத்தில்’ 1977இல் வெளியானது; அந்த ஆண்டின் ‘இலக்கியச் சிந்தனை’ விருதினையும் பெற்றது. மீனவர்களைப் பற்றி அதற்கு முன்னால் இத்தனை நம்பகமான நாவல் வந்ததில்லை. குருஸ் மிக்கேல் ஒரு பரதவன், அவன் மனைவி மரியம்மை,Continue reading “வண்ணநிலவன்: வாசனைகளால் நிரம்பிய உலகம்”

ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு

மு. இராமனாதன் Published in The Hindu-Tamil, August 2, 2015 பேக்கர் தெரு மெட்ரோ ரயில் நிலையம் லண்டன் நகரின் மத்தியில் இருக்கிறது. இந்த நிலையத்தில் ஐந்து சுரங்க ரயில் தடங்கள் குறுக்கு மறுக்காக ஓடுகின்றன. ஷெர்லக் ஹோம்ஸின் காலத்தில் இத்தனை தடங்கள் இல்லை. இப்போது ஐந்து தடங்களுக்குமாக 10 நடைமேடைகள்; அதன் வளைந்த சுவர்களில் ஷெர்லக் ஹோம்ஸின் சித்திரங்கள். வட்டத் தொப்பியும் மழை அங்கியும் புகையிலைக் குழாயுமாக உலகப் புகழ்பெற்ற துப்பறிவாளர் நம்மை வரவேற்கிறார். நடைமேடையிலிருந்துContinue reading “ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு”

அட்டன்பரோவின் திரைமொழி

மு இராமனாதன் Published in Thinnai.com, 9 February 2015 ஒரு சிலையையோ, நடனத்தையோ, ஓவியத்தையோ, கவிதையையோ ரசிப்பவர்கள் அதன் நுணுக்கங்களை ரசிக்கிறார்கள். எந்த இலக்கிய வடிவமும் உள்ளடக்கத்தைப் பார்க்கிலும் சொல்லப்படும் வகையினாலேயே சிறப்புப் பெறுகிறது. ஆனால் திரைப்படங்களில் மட்டும் அதன் அழகியலுக்குள் போகாது கதையோடு நின்று விடுகிறோம். இதற்குக் காரணம் ‘திரை மொழி’யில் தேற்சியில்லாமைதான். படிக்கத் தெரியாதவன் ஒரு சஞ்சிகையை எடுத்து எப்படிப் படங்களை மட்டும் பார்த்து விட்டு வைத்து விடுகிறானோ, அப்படித்தான் ரசிக்கத் தெரியாதவன் சினிமாவில்Continue reading “அட்டன்பரோவின் திரைமொழி”

வண்ணநிலவனின் தெரு

மு இராமனாதன் Published in Thinnai.com, 25 January 2015 செப்டம்பர் 1, 2002 அன்று ‘எழுத்தாளர்கள்’ என்ற தலைப்பில் ஹாங்காங் இலக்கிய வட்டம் நடத்திய கூட்டத்தில் பேசியது அன்பு நெஞ்சங்களுக்குத் தலை வணங்குகிறேன். இன்று வண்ணநிலவனின் ‘ரெயினீஸ் ஐயர் தெரு’வுக்குள் சென்று வரப்போகிறோம். அந்தத் தெருவில் வசிக்கும் எளிய மனிதர்களைச் சந்திக்கப் போகிறோம். அதற்கு முன்பாக வண்ணநிலவனோடு கை குலுக்கிக் கொள்வோம். வண்ணநிலவனை ஜனரஞ்சக வாசகர்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நல்ல படைப்புகளைத் தேடிப் படிக்கிற  வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும்.Continue reading “வண்ணநிலவனின் தெரு”

கில்மோரின் கட்டில்

பதிவு: தில்லி தமிழ்ச் சங்கம், புதுதில்லி, பிப்ரவரி 25, 2012 கில்மோரின் கட்டில் மு.இராமனாதன் Published in Kalachuvadu, July 2012 வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை நூல் உருவானவிதம் வித்தியாசமானது. அதன் உள்கதையின் சில பகுதிகளை நான் அறிவேன். அவற்றைக் குறித்தும் நூலாசிரியரைக் குறித்தும் சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு சிறிய கதையிலிருந்து தொடங்கலாம். டீன் கில்மோர் நடிகர், நாடக ஆசிரியர், இயக்குநர், கனடாவில் இருக்கும் டொரன்டோவில் வசிக்கிறார். அ. முத்துலிங்கம் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்.Continue reading “கில்மோரின் கட்டில்”

வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை: தமிழின் பெருமைமிகு படைப்பு

பதிவு: தில்லித் தமிழ்ச் சங்கம், புதுதில்லி, 25.02.2012 வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை: தமிழின் பெருமைமிகு படைப்பு மு. இராமனாதன் First published in Kalachuvadu, April 2012 தில்லித் தமிழ்ச் சங்கமும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து நடத்திய “வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை- கவித்தொகை – சீனாவின் சங்க இலக்கியம்” என்னும் நூலின் வெளியீட்டு விழா பிப்ரவரி 25 அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில் நடந்தது. இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் நூலை வெளியிட்டார்.Continue reading “வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை: தமிழின் பெருமைமிகு படைப்பு”

பன்னிரண்டு சிறுகதைகளும் ஒரு வாசகனின் மதிப்புரையும்

பன்னிரண்டு சிறுகதைகளும் ஒரு வாசகனின் மதிப்புரையும் மு. இராமனாதன் பேராசிரியர் கா. சிவத்தம்பி ஒரு முறை சொன்னார்: ‘தமிழின் மேன்மை, அதன் தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில் இருக்கிறது’. இது ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பிற்கும் பொருந்தும். 1970இல் தொடங்கி ஆண்டு தோறும் தெரிவு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகை நூலை வெளியிட்டு வருகிறது இலக்கியச் சிந்தனை. மழை, புயல், சூறைக்காற்று என்று எது வந்தாலும் மாதத்தின் கடைசி சனிக்கிழமை மாலையில் ஆழ்வார் பேட்டை சீனிவாச காந்தி மண்டபத்தில் இலக்கியச் சிந்தனையின்Continue reading “பன்னிரண்டு சிறுகதைகளும் ஒரு வாசகனின் மதிப்புரையும்”

கடவுச் சொற்களும் வரிசை எண்களும்

மு. இராமனாதன் First published in Thinnai on March 6, 2011 இந்தக் கணினி யுகத்தில் தகவல்கள் எல்லாம் கையெட்டும் தூரத்தில் அல்லது கை சொடுக்கும் கால அவகாசத்தில் உள்ளன. ஆனால், அவற்றை அடைவதற்குக் காவலாக நிறுத்தப்பட்டிருக்கும் கடவுச் சொல்லை (password) முதலில் கடந்தாக வேண்டும். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால், நாங்கள் கோவை தொழில்நுட்பக் கல்லுரி(Coimbatore Institute of Technology- CIT) மாணவர்களாக இருந்தபோது உலகம் கணினிமயம் ஆகவில்லை. இணையம் உருவாகவில்லை. ஆதலால் கடவுச்Continue reading “கடவுச் சொற்களும் வரிசை எண்களும்”

அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்-5 -ஆ. இரா. வேங்கடாசலபதி

மு இராமனாதன் First published in Thinnai on March 20, 2009 ஆ. இரா. வேங்கடாசலபதி ஒரு தமிழறிஞரா? இந்த மண்ணில் பல தமிழறிஞர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள், பலர் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் எந்தத் தமிழ் மரபிலிருந்து வந்தவர்களோ, அதே மரபின் வழி வந்தவர்தான் வேங்கடாசலபதி . அவர்களெல்லாம் தமிழ் மொழியின் மீதும் தமிழ்ச் சமூகத்தின் மீதும் எந்த அளவிற்கு அக்கறையும் ஈடுபாடும் கொண்டிருந்தார்களோ, அதற்கு நிகரான அக்கறையும் ஈடுபாடும்  கொண்டவர். வேங்கடாசலபதி சென்னைContinue reading “அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்-5 -ஆ. இரா. வேங்கடாசலபதி”