Published in Kalachuvadu December 2020மியான்மார்: அரசியல், ராணுவம், தேர்தல்கட்டுரைமு. இராமனாதன் “ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது!”இது பராசக்தி (1952) படத்தின் நாயகன் நீதிமன்றத்தில் பேசும் வசனம். 68 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழர்களின் நினைவு அடுக்குகளுக்குள் தேங்கிக் கிடக்கும் வசனம். ரங்கூன் பர்மாவின் தலைநகராக விளங்கியது. இரண்டாம் உலகப் போருக்கு முன்புவரை தமிழ் வணிகர்களையும் தொழிலாளர்களையும் அரவணைத்த தேசம் பர்மா. இன்று எல்லாம் மாறிவிட்டது. பர்மா, மியான்மார் ஆகிவிட்டது. ரங்கூன், யாங்கூன் ஆகிவிட்டது.Continue reading “மியான்மார்: அரசியல், ராணுவம், தேர்தல்”
Tag Archives: kalachuvadu
இந்தியாவின் புதிய முன்மாதிரிகள்: வங்கதேசமும் வியட்நாமும்
மு. இராமனாதன் Published in Kalachuvadu November 2020 அக்டோபர் மூன்றாம் வாரத்தில் இந்திய ஊடகங்களில் வங்கதேசத்தின் பெயர் தொடர்ந்து இடம்பிடித்தது. முன்பெல்லாம் வங்கதேசத் தொழிலாளர்கள் இந்திய எல்லையை அத்துமீறிக் கடந்தார்கள் என்கிற ரீதியிலான செய்திகள்தான் வரும். இந்தமுறை முற்றிலும் மாறான காரணத்துக்காக வங்கதேசம் செய்திகளில் வலம்வந்தது. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட உலகப் பொருளாதார அறிக்கைதான் இதற்குக் காரணம். நடப்பு நிதியாண்டில் வங்கதேசப் பொருளாதாரம் 3.80% வளர்ச்சி அடையும் என்று நிதியம் கணித்திருக்கிறது. இது கொரோனாக்Continue reading “இந்தியாவின் புதிய முன்மாதிரிகள்: வங்கதேசமும் வியட்நாமும்”
தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்?
Published in Kalachuvadu October 2020 மு. இராமனாதன் ஆதியில் பான் (PAN) அட்டை வந்தது. அதை ஒன்றிய அரசு தயாரித்துக் கொடுத்தது. அடுத்து ஆதார் அட்டை வந்தது. அதைத் தயாரிக்கிற பணி சில உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு புலர்காலைப்பொழுதில் அட்டைகள் இரண்டையும் இணைக்கச் சொல்லி ஆக்ஞை வந்தது. காஷ்மீர் முதல் திருப்பதிவரை புகார் ஒன்றுமில்லை. குடிமக்கள் இணைத்தனர். ஆனால் திருத்தணிமுதல் தென்குமரிவரை வாழும் ஜீவராசிகளுக்கு அட்டைகளை ஒட்டவைப்பது எளிதாக இல்லை. பான் அட்டை விண்ணப்பத்தில்Continue reading “தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்?”
வண்ணநிலவன்: வாசனைகளால் நிரம்பிய உலகம்
மு. இராமனாதன் Published in Kalachuvadu August 2020 வண்ணநிலவனின் படைப்புலகம் நாவல்களாலும் சிறுகதைகளாலும் கொஞ்சம் கவிதைகளாலும் உருவானது. அதில் கட்டுரைகளுக்கும் இடமுண்டு. அவரது எல்லாப் படைப்புகளும் எளிய மனிதர்களைச் சுற்றி வருவன; அவர்களது வாசனைகளால் நிரம்பியிருப்பன. கடல்புரத்தில் வண்ணநிலவனின் முதல் நாவல் ‘கடல்புரத்தில்’ 1977இல் வெளியானது; அந்த ஆண்டின் ‘இலக்கியச் சிந்தனை’ விருதினையும் பெற்றது. மீனவர்களைப் பற்றி அதற்கு முன்னால் இத்தனை நம்பகமான நாவல் வந்ததில்லை. குருஸ் மிக்கேல் ஒரு பரதவன், அவன் மனைவி மரியம்மை,Continue reading “வண்ணநிலவன்: வாசனைகளால் நிரம்பிய உலகம்”
அற்றைத் திங்கள் சார்ஸின் பிடியில்
கட்டுரை மு. இராமனாதன் Published in Kalchuvadu, May 2020 அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’ பாரி மகளிர் அங்கவையும் சங்கவையும் பாடிய பாடல். “அன்று வந்ததும் இதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா. அன்று எங்கள் தந்தை வேள் பாரி இருந்தார். பறம்புமலை எம்மிடம் இருந்தது. இன்று எங்கள் மலை எம்மிடம் இல்லை, எங்கள் தந்தையும் இல்லை.” புறநானூறு தெரிந்திருந்தால் ஹாங்காங் மக்களும் இந்தப் பாடலை இப்போது பாடியிருப்பார்கள். ஆனால், மூலப் பாடலைத் திருப்பிப் போட்டிருப்பார்கள்.Continue reading “அற்றைத் திங்கள் சார்ஸின் பிடியில்”
உரை: ஹாங்காங் தமிழ் வகுப்புகள்
மு. இராமனாதன் Published in Kalachuvadu, January 2016 ஹாங்காங் தமிழ் வகுப்புகள் 11 ஆண்டுகளை நிறைவுசெய்து 12ஆம் ஆண்டில் நடைபோடும் இந்த நல்ல தருணத்தில், இந்த வகுப்புகளைப் பற்றியும் அதற்கு முன்பாக இப்படியான வகுப்புகளின் அவசியத்தைப் பற்றியும் சொல்லலாம் என்று நினைக்கிறேன். நான் ஹாங்காங் பொறியியல் ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். இந்தச் சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது நான் பணியாற்றிவரும் நிறுவனத்தில், வாரம் ஒருநாள் மதிய உணவு வேளையில் மூத்தபொறியாளர் ஒருவர், புதிதாகச் சேர்ந்திருக்கும் இளம்பொறியாளர்களுக்குத் தாங்கள் பணியாற்றும் திட்டங்களின் சிறப்பு, நூதன பொறியியல் அம்சங்களைப் பற்றிப் பாடம் எடுக்க வேண்டும். உரை நடந்துகொண்டிருக்கும் போதே உணவும் நடந்தேறிவிடும். என் முறை வந்தது. நான் ஒரு சிறிய மாற்றம் செய்தேன். ஹாங்காங்கில் பொறியியல் அப்படி ஒன்றும் கிராக்கியுள்ள துறையல்ல. உண்மையிலேயே கணிதத்திலும் இயற்பியலிலும் பொறியியலிலும் ஆர்வமுள்ளவர்கள்தான் பொறியியல் படிக்க வருவார்கள். தவிர, இங்குள்ள பல்கலைக்கழகங்கள் உலகத்தரமானவை. ஆகவே, இந்த இளம் சீனப்பொறியாளர்களின் பொறியியல் அறிவு சிறப்பாக இருக்கும். ஆனால், அவர்களின் ஆங்கிலத்தைப் பற்றி அப்படிச் சொல்வதற்கு இல்லை. நான் பணியாற்றும் துறையில் படம் வரைவது, கணக்கீடுகள் போடுவது மட்டுமல்ல, எழுதுகிற வேலையும் கணிசமாக உண்டு. அறிக்கைகள், கடிதங்கள், ஒப்பந்தங்கள் பொருட்களின் வேலையின் தரம் எப்படியிருக்க வேண்டும் என்கிற விவரக்குறிப்புகள், மின்னஞ்சல்கள் என்று நாள்தோறும் நிறைய எழுத வேண்டும். ஹாங்காங் மக்கள் சீனமொழியில்தான் பேசு கிறார்கள், எழுதுகிறார்கள், படிக்கிறார்கள். எல்லா மென்பொருள்களும் நிரல்களும் சீனத்திலேயே இருக்கின்றன. எண்களைக் கூடச் சீனமொழியில்தான் எழுதுவார்கள் சொல்லுவார்கள். எனினும் பொறியியல்துறையில் அலுவல்மொழி ஆங்கிலமாகத்தான் இருந்துவருகிறது. இந்த எழுத்து வேலையில் சீன இளைஞர்களின் ஆங்கிலம் சிலாக்கியமானதாக இல்லை. ஆகவே, பொறியியல் தொடர்பான அறிக்கைகளிலும் கடிதங்களிலும் விவரக்குறிப்பு களிலும் என்னென்ன கூறுகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும், எப்படி அவற்றை அலுவல்ரீதியான ஆங்கிலத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று பேசினேன். நான் எதிர்பார்க்கவேயில்லை. அதற்குப் பெரிய வரவேற்பு இருந்தது. அந்த இளைஞர்கள் அடுத்தடுத்த வாரங்களில், குறிப்பிட்ட சூழலில் எழுதப்படும் கடிதம் எப்படி இருக்க வேண்டும், அறிக்கை எப்படி இருக்கவேண்டும் என்பதுபோலப் பயிற்சி எடுத்துக்கொண்டு எழுதினார்கள். இச்சம்பவம் நடந்த சிலமாதங்களில் இந்தியாவில் நடந்துவந்த ஒரு திட்டப்பணிக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டேன். ஹாங்காங் இளைஞர்கள் சொல்லுவார்கள், ‘இந்தியர்கள் ஆங்கிலத்தில் விற்பன்னர்கள்’ என்று! நானும் அப்படித்தான் நம்பிவந்தேன். ஆனால் அருகிலிருந்து பார்த்தபோதுதான் தெரிந்தது இந்திய இளம் பொறியாளர்களின் ஆங்கிலமும் மெச்சிக் கொள்ளும் படியாக இல்லை. என்னிடத்தில் ஹாங்காங்கில் நான் நிகழ்த்திய உரைக்குறிப்புகள், Power Point Presentation எல்லாம் இருந்தது. ஒருநாள் மாலைவேளையில் அந்த உரையை நிகழ்த்துவது என்ற முடிவுசெய்து அறிவிப்பை வெளியிட்டேன். இந்தியாவில் எனக்கு வேறுவிதமான ஆச்சரியம் காத்திருந்தது. மிகமிகக் குறைவான இளைஞர் களே உரையைக் கேட்க வந்திருந்தனர். இரண்டொரு நாட்களுக்குப் பிறகு சாவதானமாக வராத சிலபேரிடம் ஏன் வரவில்லை என்று கேட்டேன். “கடிதம் எழுதுவதற்கு என்ன பெரிய பயிற்சி வேண்டும்? நீங்கள் பொறியியலைப் பற்றிப் பேசுங்கள்; வருகிறோம்” என்றார்கள். இதிலிருந்து நான் இரண்டு விஷயங்களைப் புரிந்துகொண்டேன். சீன இளைஞர்களுக்குத் தங்களது ஆங்கிலம் குறைபாடு உடையது என்று தெரிந்திருக்கிறது. இந்திய – தமிழக இளைஞர்களின் ஆங்கிலமும் குறைபாடு உடையது தான். ஆனால் அது அவர்களுக்குத் தெரியவில்லை. இரண்டாவதாக, இப்போது தமிழகத்தில் படிக்கிற இளைஞர்களில் பலர் தமிழ் படிப்பதில்லை. அவர்கள் முதல் பாடமாக பிரெஞ்சு, ஜெர்மன், சமஸ்கிருதம், உருது என்று ஏதேனும் ஒரு மொழியைப் படிக்கிறார்கள். கேட்டால் நிறைய மதிப்பெண் வாங்கலாம் என்கிறார்கள். ஹாங்காங் இளம் பொறியாளர்கள் தங்களது தாய் மொழியான சீனமொழியில் சிந்தித்து, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் சிந்தனையில் தெளிவு இருக்கிறது. மொழி மாற்றத்தில்தான் குறை இருக்கிறது. அதைப் பயிற்சி மூலம் அவர்கள் மேம்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் தமிழக இளம் பொறியாளர்களுக்கு அல்லது அவர்களில் பலருக்குத் தாய்மொழியில் சிந்திக்க முடிவதில்லை, ஆங்கிலத்திலும் சிந்திக்க முடிவதில்லை. தாய்மொழிக் கல்வியின் மகத்து வத்தை உலகெங்குமுள்ள கல்வியாளர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டுப் பெற்றோர்களின் காதுகளில் அது விழுவதில்லை. சரி, இது தமிழகத்தின் நிலைமை. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஏன் தமிழ் படிக்க வேண்டும்? அப்படிப் படிப்பதில் சிரமம் உள்ளதே என்பது அடுத்த கேள்வி. அ. முத்துலிங்கத்தின் சிறுகதையொன்றில் வரும் ஒரு பையன், கனடாவில் வசிப்பவன், அவனது தாய் சனிக்கிழமைத் தமிழ் வகுப்புக்குப் போகச்சொல்லி நிர்ப்பந்தப்படுத்தும்போது சொல்லுவான்: “அம்மா, நான் இரண்டு நாட்டுக்குக் குடிமகனாக இருக்கமுடியாது.” புலம்பெயர்ந்து வாழும் சிறுவர்களின் பிரச்சனை இதுதான். அவர்களைச் சுற்றித் தமிழ் இல்லை, தமிழ்க் கலாச்சாரம் இல்லை, தமிழ்ப் பத்திரிகைகள், தமிழ்த் திரைப்படங்கள், தமிழ்ச் சுவரொட்டிகள், தமிழ் அறிவித்தல்கள் இல்லை. ஆகவே ‘ஏன் படிக்க வேண்டும் தமிழ்?’ என்பது அவர்கள் மனதில் எழும் கேள்வி. ஏனென்றால், அவர்கள் அதில்தான் இயல்பாகச் சிந்திக்க முடியும். வீட்டில் பெற்றோர்கள் அதற்கான சூழலை, தமிழில் எப்போதும் பேசும் சூழலை உருவாக்க வேண்டும். மேலும், தாய்மொழிதான் அவர்களது அடையாளம், முகவரி. எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அந்த நாட்டின் மொழியைக் கற்க வேண்டும், அவர்களது பண்பாட்டிற்கு இசைவாக நடக்க வேண்டும் என்பதெல்லாம் உண்மைதான். அதே வேளையில் தாய்மொழிக் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். “என்னுடைய தாய்மொழி தமிழ். But I do not Speak Tamil” என்று சொல்லுகிற தமிழ் இளைஞனை எந்த வெளிநாட்டுக்காரனும் மதிக்கப்போவதில்லை. தாய்மொழிக் கல்வி உணர்வுபூர்வமானது. மிக இயல்பானது. அதுவே தெளிவான சிந்தனைப்போக்கை, படைப்பூக்கத்தை வளர்க்க வல்லது. உலகெங்கும் வாழும் தமிழர்கள், பல நாடுகளிலும் இந்தத் தமிழ் வகுப்பை முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் வெற்றி பெற்றவர்கள் குறைவு. காரணம் மாணவர்களுக்கு ஆர்வம் குறைவாக இருக்கிறது. அவர்களுக்குத் தாய்மொழியைக் கற்பிப்பதற்கு முன்பாக தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை உணரச் செய்ய வேண்டும். ஹாங்காங் தமிழ் வகுப்பு அதைச் செவ்வனே செய்துவருகிறது. அதனால்தான் தொடர்ச்சியாக 12ஆம் ஆண்டில் அதனால் செயல்பட முடிகிறது. கா. சிவத்தம்பி ஒருமுறை குறிப்பிட்டார்: “தமிழின் மேன்மை, அதன் தொன்மையில் இல்லை; அதன் தொடர்ச்சியில் இருக்கிறது.” ஆயிரக்கணக்கானஆண்டுகள் பழமைவாய்ந்த ஒரு செம்மொழி, இன்னும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு நவீன மொழி நம்முடைய தாய்மொழியாக அமைந்தது எதேச்சையாக இருக்கலாம். ஆனால் அது பெருமைக்குரியதல்லவா? அந்தமொழியை நம் அடுத்த தலைமுறைக்குக் கைமாற்றுவது நமது கடமை. அதன் இலக்கியச் செழுமையை அவர்கள் கற்றுணர வகைசெய்ய வேண்டாமா? அதைத்தான் ஹாங்காங் தமிழ் வகுப்புகள் செய்துவருகின்றன. தமிழ்மொழியைப் போலவே ஹாங்காங் தமிழ் வகுப்புகளும் அதன் தொடர்ச்சியினால்தான் பெருமையடைகிறது. இந்தச் சாதனையை நிகழ்த்தி வருவதற்கு முக்கியக் காரணி- இதன் மாணவர்கள். அந்த 125 தமிழ்ச் சிறுவர் சிறுமியரைப் பாராட்டுகிறேன். அவர்களின் பெற்றோர்களைப் பாராட்டுகிறேன். 11 ஆண்டுகளாக இந்த வகுப்புகளைச் சிறப்பாக நடத்திவரும் தமிழ் வகுப்பின் அமைப்பாளர்கள் தைக்கா உபைதுல்லா, அப்துல் அஜீஸ், ஷேக் அப்துல்காதர், சையத் அஹமத், எஸ்.எஸ். முபாரக், காழி அலாவுதீன், எம். அப்துல்காதர், பிரபு சுஐபு ஆகியோரைப் பாராட்டுகிறேன். இந்த வகுப்புகளின் இப்போதைய ஆசிரியர்களான திருமதிகள் சுதாரவி, கதீஜாகாஃபர், கவிதாமோகன், ஷபீனா அப்துல்ரகுமான், அனுராதா ரங்கநாதன், ஸ்ரீப்ரியா பூவராகவன், ராதாமணி, மணிமேகலை செந்தில்நாதன், கலைச்செல்வி அருணாச்சலம், பூங்குழலி சுந்தரமூர்த்தி, கண்மணிசெல்வம், அலமேலு இராமனாதன், சித்ரா வெங்கடசுப்ரமணியன் ஆகியோருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மு. இராமனாதன் ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்; தமிழ் வகுப்புகளின் ஆலோசகர். ‘ரேடியோ ஹாங்காங்’ சிறுபான்மை தேசிய இனங்களுக்காக நிகழ்த்திவரும் ஒலிபரப்பில் 26.9.15 அன்று தமிழில் பேசியது) மின்னஞ்சல்: mu.ramanathan@gamil.com
அஞ்சலி: செ. முஹம்மது யூனூஸ் (1924 – 2015)
ஒரு மானுட நேயர் மு. இராமனாதன் Published in Kalachuvadu, December 2015 எனது பர்மா குறிப்புகள்’ புத்தகத்தில் தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்கிற இடத்தில் யூனூஸ் பாய் இப்படித் தொடங்குவார்: “1924ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று பிறந்தேன்.” டிசம்பர் 25 என்று தேதியைக் குறிப்பிடமாட்டார். ஒருவேளை தனது மரணச் செய்தியைத் தானே எழுதுகிற வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருந்தால், “2015ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி உயிர்நீத்தேன்” என்று எழுதியிருக்க மாட்டார். மாறாக, “2015ஆம் ஆண்டு திருநாளான பக்ரீத்Continue reading “அஞ்சலி: செ. முஹம்மது யூனூஸ் (1924 – 2015)”
கில்மோரின் கட்டில்
பதிவு: தில்லி தமிழ்ச் சங்கம், புதுதில்லி, பிப்ரவரி 25, 2012 கில்மோரின் கட்டில் மு.இராமனாதன் Published in Kalachuvadu, July 2012 வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை நூல் உருவானவிதம் வித்தியாசமானது. அதன் உள்கதையின் சில பகுதிகளை நான் அறிவேன். அவற்றைக் குறித்தும் நூலாசிரியரைக் குறித்தும் சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு சிறிய கதையிலிருந்து தொடங்கலாம். டீன் கில்மோர் நடிகர், நாடக ஆசிரியர், இயக்குநர், கனடாவில் இருக்கும் டொரன்டோவில் வசிக்கிறார். அ. முத்துலிங்கம் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்.Continue reading “கில்மோரின் கட்டில்”
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை: தமிழின் பெருமைமிகு படைப்பு
பதிவு: தில்லித் தமிழ்ச் சங்கம், புதுதில்லி, 25.02.2012 வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை: தமிழின் பெருமைமிகு படைப்பு மு. இராமனாதன் First published in Kalachuvadu, April 2012 தில்லித் தமிழ்ச் சங்கமும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து நடத்திய “வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை- கவித்தொகை – சீனாவின் சங்க இலக்கியம்” என்னும் நூலின் வெளியீட்டு விழா பிப்ரவரி 25 அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில் நடந்தது. இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் நூலை வெளியிட்டார்.Continue reading “வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை: தமிழின் பெருமைமிகு படைப்பு”
ஓர் எதிர்வினை
அச்சு வழிபாட்டின் பாரம்பரியம் மு. இராமனாதன் First published in Kalachuvadu, October 2007 கண்ணனின் தமிழ் ஊடகங்கள் குறித்த உரையை ஆர்வத்தோடு வாசித்தேன். அதில் ஓரிடத்தில் தமிழில் திரைப்பட நட்சத்திரத்துக்காகத் தொடங்கப்பட்ட முதல் இதழ் ‘ரஜினி ரசிகன்’ என்று அவர் நினைப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அச்சு ஊடகங்கள் மூலமாக நடைபெற்று வரும் நட்சத்திர வழிபாட்டை 15-20 ஆண்டுகளுக்குள் குறுக்கிவிட முடியும் என்று தோன்றவில்லை. அது நீண்ட பாரம்பரியமுள்ளது. எழுபதுகளில் சிவாஜி ரசிகர்களுக்காகவே நடத்தப்பட்ட பல இதழ்களை வாசித்திருக்கிறேன்.Continue reading “ஓர் எதிர்வினை”