அடுக்கக விதிகளை விரிவுபடுத்துவோம்

மு. இராமனாதன் Published in The Hindu Tamil- July 10, 2015 வெளிநாடுகளில் இருப்பதுபோன்ற கட்டுமான விதிகள் இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டு ஜூன் 28 அன்று அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. 61 பேர் பலியாயினர். மவுலிவாக்கம் என்ற பெயர் சென்னையைத் தாண்டி, இந்தியாவைக் கடந்து, உலக நாக்குகளில் புரண்டது. இந்த விபத்துக்கு விதிமீறல்கள்தான் காரணம் என்றனர் சிலர். சென்னையில் அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கான ஒப்புதல்கள்Continue reading “அடுக்கக விதிகளை விரிவுபடுத்துவோம்”

தொடுதிரை அடிமைகள்

மு. இராமனாதன் Published in The Hindu Tamil- June 17, 2015 உங்களிடம் தொடுதிரை மோகம் அதிகமாக இருந்தால் உங்களுக்கு நோமோ-ஃபோபியா என்ற நோய் இருக்கிறது ஒரு தமிழறிஞர் என்னிடம் சொன்னார்: “வள்ளுவர் தொட்டனைத்து ஊறும் அறிவு என்று சொல்கிறார். அந்தக் காலத்தில் அவர் தொடுதிரைகளைப் பற்றிச் சிந்தித்திருக்க முடியாதுதான். ஆனால், இன்று ஸ்மார்ட்போன் திரையைத் தொட்டால் தகவல்கள் ஊறிப் பெருகி வழிந்தோடுகிறதல்லவா? இப்படியாக வள்ளுவர் எல்லாக் காலத்துக்கும் பொருத்தமாக விளங்குகிறார்”. அறிஞர் வள்ளுவரைப் பற்றிச் சொன்னதைContinue reading “தொடுதிரை அடிமைகள்”

நம் கல்வி… நம் உரிமை!- நடுவில் தொலைந்துபோன பக்கங்கள்

மு. இராமனாதன் Published in The Hindu-Tamil, 14 May 2015 அந்தக் காலத்தில் +2 இல்லை. பள்ளிப் படிப்பு பதினோராம் வகுப்போடு முடியும். அது எஸ்.எஸ்.எல்.சி. எனப்பட்டது. பள்ளிப் படிப்பையும் பட்டப் படிப்பையும் இணைக்கும் ஓராண்டுப் படிப்பு பி.யூ.சி. எனப்பட்டது. இதைக் கலைக் கல்லூரிகளில் படிக்க வேண்டும். ஆக 10, 11, 12 என ஒவ்வொரு வகுப்பையும் தனித்தனியாகப் படித்துத் தேற வேண்டும். 10-ம் வகுப்புக்கும் 12-ம் வகுப்புக்கும் நடுவில், கொஞ்சமல்ல, 11-ம் வகுப்புப் பாடங்கள் முழுவதையும்Continue reading “நம் கல்வி… நம் உரிமை!- நடுவில் தொலைந்துபோன பக்கங்கள்”

காந்தியை ஏமாற்றிவரும் இந்தியா

மு. இராமனாதன் Published in The Hindu Tamil- May 8, 2015 சட்டத்தை மீறக் கூடாது என்ற உணர்வு ஹாங்காங் கல்விமுறையின் அடிப்படை போதனைகளுள் ஒன்று! கடந்த வாரம் ஹாங்காங்கில் ஓர் இந்திய அங்காடிக்குப் போயிருந்தேன். பொருட்களை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்றேன். எனக்கு முன்னால் ஓர் இளம்பெண். கைபேசியில் தனது மூன்று வயது மகனின் குறும்புகளைப் பற்றிப் பெருமையாக அலுத்துக்கொண்டிருந்தார்- ஆங்கிலத்தில். கடைக்காரர் அந்தப் பெண் வாங்கியிருந்த காய்கறிகள், மளிகைப் பொருட்கள், நறுமணப் பொருட்கள், தின்பண்டங்கள் முதலானவற்றைத்Continue reading “காந்தியை ஏமாற்றிவரும் இந்தியா”

இலங்கை – சீனா – இந்தியா

மு. இராமனாதன் Published in The Hindu-Tamil, 25 April 2015 இலங்கையால் சீனாவைப் புறக்கணிக்க முடியாது; இந்தியாவுக்கும் இலங்கையுடனான அணுக்கம் அவசியம். மார்ச் மாத இறுதியில் இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா சீனாவுக்கு வருகை தந்தார். அவருக்கு பெய்ஜிங் மக்கள் மாமன்றத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங். கடந்த செப்டம்பர் மாதம் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ‘கொழும்பு துறைமுக நகரம்’ எனும் திட்டத்தைத் தன் சொந்தக் கரங்களால் தொடங்கி வைத்திருந்தார் சீனContinue reading “இலங்கை – சீனா – இந்தியா”

ஒரு கோடிப் புத்தகங்கள்

மு. இராமனாதன் Published in The Hindu Tamil, 1 April 2015 நூலகங்களில் செய்யப்படுகிற முதலீடு வாழ்நாள் முழுதும் கற்கிற அறிவுலகத்தை உருவாக்கும். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஹாங்காங்கில் நடந்தது. எனது நூலக அட்டை தொலைந்து விட்டது. அப்போது புறநகர் ஒன்றின் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு மாறியிருந்தோம். வீடு மாற்றும்போது தவறியிருக்க வேண்டும். புதிய வீட்டிலிருந்து 10 நிமிட நடை தூரத்தில் நூலகம் இருந்தது. ஹாங்காங்கில் மக்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளின் மையத்தில் நூலகங்கள் இருக்கும். வரவேற்பில் இருந்தContinue reading “ஒரு கோடிப் புத்தகங்கள்”

“இந்தியாவில் தொழிற் பயிற்சிப் பள்ளிகள் வேண்டும்” – ஹாங்காங் தொழிலதிபர் எம். அருணாச்சலம் நேர்காணல்

மு இராமனாதன் Published in Dinamalar, 19 Februray 2015 [எம்.அருணாச்சலம் ஹாங்காங் வர்த்தகர், தொழிலதிபர். இந்தியாவிலும் சீனாவிலும் இவருக்குத் தொழிற்சாலைகள் உள்ளன. ஹாங்காங் இந்திய வர்த்தகக் குழுமத்தின் தலைவர். ஹாங்காங்கில் முதலீட்டை ஊக்குவிப்பிதற்காக ஹாங்காங் அரசு இவரை ஒரு அம்பாசிடராக நியமித்திருக்கிறது.  இந்தியா- சீனா- ஹாங்காங் இடையே வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். அதற்காக இந்திய அரசு இவருக்கு சிறந்த வெளிநாட்டு இந்தியருக்கான விருதை வழங்கியது. சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் இவரது சொந்த ஊர். இனி அவரது பேட்டி…] ஹாங்காங்கில் வாழ்கிற தென்னிந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் பொதுவாக மாதச் சம்பளம் பெறுகிற வேலையில்தான் இருப்பார்கள். வணிகத்திலோ தொழிலிலோ ஈடுபடுபவர்கள் குறைவு. உங்களுக்கு இதில் எப்படி ஆர்வம் வந்தது?  நானும் மாதச் சம்பளக்காரனாகத்தான் இருந்தேன். இந்திய வங்கி ஒன்றில் ஹாங்காங் கிளையில் வேலை பார்த்தேன். 1979இல் அந்த வேலையை விட்டு விட்டேன். அப்போது இந்தோனேசியாவில் திரு. சீனிவாசன், ஹாங்காங்கில் திரு. ரகுமான் ஆகிய நண்பர்கள் தொழில் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள்தான் ‘சொந்தமாகத் தொழில் பண்ணுங்க’ என்று என்னை ஊக்குவித்தார்கள். அப்போது டெங் ஸியோபிங்கின் தலைமையில் சீனாவில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அமலாகிக் கொண்டிருந்தன. அப்போது இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் நெசவு ஆலைகளுக்கான மூலப் பொருட்கள் கொரியா, ஜப்பான், தைவான் முதலிய நாடுகளிலிருந்து வந்து கொண்டிருந்தன. ஜெர்மெனி, கனடா போன்ற நாடுகளிலிருந்தும் வந்தன. ஹாங்காங் நடுவில் இருந்தது. வணிகம் செய்வதற்கு ஏற்ற இடமாகவும் விளங்கியது. ஹாங்காங் வங்கிகளில் Letter of Credit  என்று சொல்லப்படுகிற, வங்கிகள் வழங்குகிற உத்திரவாதப் பத்திரத்தின் மூலம், மூலப்பொருட்களை பல நாடுகளிலிருந்தும் வாங்கி இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும், பிறகு சீனாவுக்கும் கூட அனுப்பி வைத்தோம். இந்தோனேசியாவிலிருந்து  திரு. சீனிவாசனும், இந்தியாவிலிருந்து திரு. ரத்தன்லால் தித்வானியா, திரு. சங்கர் ஷராப் ஆகியோரும், அவர்களுக்குக் கிடைத்திருந்த ஆர்டரை எங்களுக்குக் கொடுத்து உதவினார்கள். இந்தியாவிலும் பல ஆலைகள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து பொருட்களை வாங்கினார்கள். இப்படித்தான் எங்களுடைய வணிகம் ஆரம்பித்தது.  ஒரு வணிகராக வாழ்க்கையைத் தொடங்கிய நீங்கள் இப்போது தொழிலதிபராகவும் இருக்கிறீர்கள். தொழில்துறைக்கு எப்போது வந்தீர்கள்?  1997இல் ஹாங்காங் ஆங்கிலேயரிடமிருந்து சீனாவிற்குக் கைமாறியது. ஹாங்காங் என்னவாகும் என்பதைப் பற்றி அப்போது பலரும் பல விதமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் முன்னேற்பாடாக இருந்து கொள்ளலாம் என்று 1995இல் இந்தியாவில் தொழில் தொடங்கினோம். பிற்பாடு சீனாவிலும் தொடங்கினோம்.  இந்தியாவில் என்னென்ன தொழில் செய்கிறீர்கள்?  திருப்பூர், உடுமலைப்பேட்டை, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் நூற்பு ஆலைகள் நடத்துகிறோம். நூற்பு, நெசவு, பின்னல் எல்லாம் செய்கிறோம். உற்பத்தியாகும் பொருட்களை இந்தியச் சந்தையிலேயே விற்று விடுவோம்.  சென்னையில் கட்டுமானத் துறைக்கான இயந்திரங்களைச் சீனாவிலிருந்து வாங்கி விற்கிறோம். விற்பனையோடு நின்றுவிடாமல் தொடர்ந்து சேவை செய்கிறோம், உபரிப் பொருட்கள் விற்கிறோம், பழுது பார்த்துக் கொடுக்கிறோம். சமீபத்தில் prefabrication கட்டுமானமும் ஆரம்பித்திருக்கிறோம்.  அகமதாபாத் காந்திநகரில் கடிகாரப் பாகங்கள் தயாரிக்கிற தொழிற்சாலை இருக்கிறது. சுவிட்ஸர்லாந்து நிறுவனமொன்றோடு சேர்ந்து தொடங்கினோம். இப்போது நாங்களே நடத்திக் கொண்டிருக்கிறோம். சில கடிகார உதிரிப்பாகங்களை இந்தியாவில் நாங்கள் மட்டும்தான் தயாரிக்கிறோம். எங்களிடமிருந்து அதிகமாக  இந்தப் பாகங்களை வாங்குவது டைட்டான். இதைத் தவிர சுவிட்ஸர்லாந்திற்கும் சீனாவிற்கும் ஏற்றுமதி செய்கிறோம்.  விரைவில் ராமனாதபுரத்தில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கப் போகிறோம். அதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். தெலுங்கானா மாநிலத்தில் சிங்கரேனி நிலக்கரிச் சுரங்கத்திற்கு அருகில்  அனல் மின்நிலையம் தொடங்கப் போகிறோம். இடம் வாங்கியாகிவிட்டது. அரசாங்க அனுமதியும் கிடைத்து விட்டது. விரைவில் இயந்திரங்களை அனுப்புவோம்.  மிக்க மகிழ்ச்சி; சீனாவில் உங்கள் தொழிற்சாலைகள் எங்கெல்லாம் உள்ளன?  சீனாவைப் பொறுத்தமட்டில் ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளைக் குத்தகைக்கு எடுத்து நடத்துகிறோம். ஆடை உற்பத்தியிலும், பொறியியல் சார்ந்த உற்பத்தியிலும் முக்கியமாக ஈடுபட்டிருக்கிறோம். ஹாங் ஜோவ் அருகில் ஜி ஜியாங் என்கிற ஊரில், ஊடான் மாநிலத்தில் சாங் ஷோ, இன்னும் ஷாங்காய் நகருக்கு அருகிலும் க்வாங் ஜோ நகருக்கு  அருகிலும் எங்களது தொழிற்சாலைகள் இருக்கின்றன. நெசவு ஆடைகள், தோல் ஆடைகள் உற்பத்தி செய்கிறோம். அமெரிக்கா, தென்னமரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.  இந்தத் தொழில்களுக்கு மத்தியில் ஹாங்காங்கில் உங்கள் வணிகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. என்னென்ன பொருட்களை வாங்கி விற்கிறீர்கள்?  சீனாவிடமிருந்து உருக்குப் பொருட்களை வாங்கி இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் அனுப்புகிறோம். ஆஸ்திரியாவிலிருந்து இரும்புத் தாது வாங்கிச் சீனாவிற்கு விற்கிறோம்.  இந்தியாவிலிருந்து உணவுப் பொருட்கள் வாங்கி சீனா, மலேசியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு விற்கிறோம். தென்னமரிக்க நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் ஆடைகள் ஏற்றுமதி செய்கிறோம். தவிர,  அந்தந்தக்  காலகட்டத்தில் என்னென்ன பொருட்களுக்குக்  கிராக்கி இருக்கிறதோ அவற்றை வாங்கி விற்பனை செய்கிறோம்.  உங்களுக்குச் சீனாவிலும் தொழிற்சாலைகள் இருக்கின்றன; இந்தியாவிலும் இருக்கின்றன. இவற்றை உங்களால் ஒப்பிட முடியுமா?  உற்பத்தியிலும், உழைப்பிலும், சேவையிலும் சீனா வெகுதூரம் முன்னால் இருக்கிறது. விலையிலாகட்டும், தரத்திலாகட்டும், காலந் தவறாமையிலாகட்டும் சீனாவோடு இந்தியாவை ஒப்பிடவே முடியாது. ஆனால் இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது.  இந்தியாவில் தொழில்துறையில் பல தாமதங்கள் நேருகின்றன. துறைமுகத்தில் தாமதம் ஏற்படும். போக்குவரத்தில் தாமதம் ஏற்படும். மின்சாரம் முழுமையாகக் கிடைக்காமல் போகும். அரசின் கொள்கை முடிவுகள் காரணமாக மூலப்பொருட்களின் விலை மாறிக் கொண்டேயிருக்கும். இதனால் சீனாவில் இருப்பது போன்ற தொழில் சமநிலை இந்தியாவில் இருப்பதில்லை.  தொழிலாளர்களை ஒப்பிட முடியுமா?  சீனாவில் தொழில் கலாச்சாரம் இருக்கிறது. இந்தியாவில் இது குறைவு. என்னுடைய அனுபவத்தில் இதைக் கோவை மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்களிடம் பார்க்கலாம். திருப்பூர், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள தொழிலாளர்களிடமும் குஜராத் அகமதாபத்தில் உள்ள தொழிலாளர்களிடமும் பார்க்கலாம். திண்டுக்கல் போன்ற பகுதிகளில் பூ எடுக்கிற காலம் என்றால் தொழிற்சாலையை விட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.  இன்னும் விவசாயப் பின்புலத்திலிருந்து ஒரு தொழிலுக்கான கலாச்சாரத்திற்கு அவர்கள் வரவில்லை.  தொழிலாளர்களின் வேலைத் திறன் எப்படி?  இதிலும் சீனா முன்னணியில்தான் இருக்கிறது. சீனாவில் ஒரு ஷிப்டில் 6  டஜன் பண்டல்கள் செய்கிறார்கள் என்றால், கோவை- திருப்பூர் தொழிலாளர்கள் 3  டஜன் செய்வார்கள். மற்ற பகுதிகளில் அதிலும் பாதிதான் செய்வார்கள்.  சீனத் தொழிலாளிகள் திறமையாகத் தொழில் செய்வதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?  அவர்கள் தொழிற்சாலையை ஒட்டியிருக்கிற டார்மிட்டிரியிலேயே தங்கிக் கொள்வார்கள். பீஸ் ரேட்டில் வேலையை எடுத்துச் செய்வார்கள். ஓவர் டைமில் வேலை செய்வார்கள். நல்ல உழைப்பாளிகள். இதைவிட முக்கியமானது தொழில் பயிற்சி. எல்லாரும் படித்திருப்பார்கள். உயர்நிலைப் பள்ளி வரை கல்வி இலவசம். இதற்குப் பிறகு சீனாவில் ஏராளமான தொழில் சார்ந்த பயிற்சிப் பள்ளிகள் (vocational training schools) உள்ளன. சமையல் வேலையாகட்டும், கிரேன் ஓட்டுவதாகட்டும், கொத்தனார் வேலையாகட்டும், பின்னல் வேலையாகட்டும் எல்லாவற்றுக்கும் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. இது உண்டு-உறைவிடப் பள்ளி. அந்தந்த வேலைக்கு ஏற்ற மாதிரி இந்தப் பயிற்சி இரண்டு வாரத்திலிருந்து இரண்டு மாதம் வரை வேறுபடும். ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அந்த மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் சேர்ந்து படிக்கலாம். முற்றிலும் இலவசம். படிப்பு முடிந்ததும் அவர்களே வேலைக்கும் ஏற்பாடு செய்வார்கள். சமையல் வேலைக்கு பயிற்சி எடுத்தவரை ஹோட்டலுக்கு அறிமுகக் கடிதம் கொடுத்து அனுப்புவார்கள். உடனே வேலை கிடைக்கும். இந்தியாவிலும் இந்தத் தொழிற் பயிற்சிப் பள்ளிகள் வரவேண்டும். பலரும் பயிற்சி இல்லாமல்தான் முதலில் வேலையில் சேருகிறார்கள். இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டத்தில் 100 நாட்கள் வேலை கொடுக்கிறார்கள். இதில் முதல் 30 நாட்கள் ஒரு குறிப்பிட்ட தொழிற் பயிற்சியை இலவசமாகக் கொடுக்கலாம். அடுத்த 70 நாட்கள் அதே தொழிலில் அவர்களை ஈடுபடுத்தலாம்.  சீனத் தொழிலாளர்களுக்கு வேலையைக் குறித்த அறிவு இருக்கிறது, வேலைக்கான பயிற்சி இருக்கிறது, அவர்களிடத்தில் தொழில் கலாச்சாரம் இருக்கிறது.  ஆகவே அவர்கள் தொழில் திறமை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் உலக நாடுகளெல்லாம் சீனாவில் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்கிறார்கள்.  சீன அரசாங்கத்தின் அணுகுமுறை எப்படி இருக்கிறது?  அரசாங்கம் தொழிலுக்கு அனுசரணையாக இருக்கிறது. ஹாங்காங்கிற்குப் பக்கத்திலே இருக்கிற நகரம் ஷென்ஜன். 1980இல் சிறப்புப் பொருளாதார மண்டலம் கொண்டு வந்தார்கள். அப்போது ஷென்ஜனின் மக்கள் தொகை 2 இலட்சம். இப்போது ஹாங்காங்கை மிஞ்சி விட்டது. 1 கோடிக்கும் மேல். எவ்வளவு தொழிற்சாலைகள்? எவ்வளவு உற்பத்தி நடக்கிறது? நகரத்தின் உள்கட்டமைப்பை எவ்வளவு தூரம் உயர்த்தியிருக்கிறார்கள்?  இந்தியாவில் எப்படி இருக்கிறது?  ஒவ்வொரு திட்டத்திற்கும் பல்வேறு அனுமதிகள் வாங்க வேண்டும். முதலில் அந்த இடத்தின் உபயோகத்தை மாற்றுவதற்கு ஒப்புதல் வாங்க வேண்டும்.பிறகு சுற்றுச் சூழல் அனுமதி. இதற்கான விதிமுறைகள் தெளிவாக இல்லை. சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்து ஒரு அறிக்கை தயாரிக்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் அதைப் பரிசீலித்து மா நில அரசுக்கோ மத்திய அரசுக்கோ அனுப்புவார். அவர்கள் பல சமயங்களில் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பிவிடுவார்கள். புகைபோக்கியின் உயரத்திற்கு அனுமதி வாங்க வேண்டும். விமான நிலையத்திலிருந்து 500கி.மீ தூரத்தில் இருந்தாலும் அவர்களிடமும் ஆட்சேபணை இல்லை என்று அனுமதி வாங்க வேண்டும். ஒன்றுக்கும் காலக் கெடு இல்லை. இதற்குப் பின்னாலேயே அலைந்தால் இரண்டு வருடங்களில் எல்லா அனுமதிகளையும்  வாங்கலாம்.  சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் எப்படி?  அங்கேயும் விதிமுறைகள் தெளிவாக இல்லை. ஷென்ஜனைப் பற்றிச் சொன்னேன் அல்லவா?.1998இல் முரசொலி மாறன் வாஜ்பாயி அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தார். வாஜ்பாயி சீனாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எப்படி இயங்குகின்றன என்று பார்த்து வருமாறு அவரை அனுப்பினார். மாறன் ஹாங்காங்கிற்கு வந்து, இங்கிருந்து ஷென்ஜன் போனார். இந்திய வர்த்தகச் சேம்பரின்  சார்பாக நாங்களும் கூடப் போனோம். அவர்கள் சொன்னார்கள்: இங்கே தொழில் தொடங்க வேண்டுமென்றால் எங்களுக்கும் 24 துறைகளிலிருந்து அனுமதி வாங்க வேண்டும். ஆனால் தொழில் முனைவோர் இந்த 24 துறைகளுக்கும் போக வேண்டாம். ஷென்ஜன் நகராட்சி ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரியை (nodal officer) நியமிக்கும். அவரிடம் விண்ணப்பப் படிவத்தையும் எல்லா ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.அந்த அதிகாரி 24 துறைகளையும் தொடர்பு கொள்வார். அந்தந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு ஏதேனும்ஆட்சேபணை இருந்தால் ஒரு மாதத்திற்குள் இந்த ஒருங்கிணைப்பு அதிகாரியிடம் தெரிவிக்கவேண்டும். இல்லையென்றால் எதிர்ப்பு இல்லை என்று அர்த்தம். இந்த ஒருங்கிணைப்பு அதிகாரியே 24 துறைகளின் சார்பாக அனுமதி வழங்கி விடுவார்.Continue reading ““இந்தியாவில் தொழிற் பயிற்சிப் பள்ளிகள் வேண்டும்” – ஹாங்காங் தொழிலதிபர் எம். அருணாச்சலம் நேர்காணல்”

வலசை போகும் சீனர்கள்

மு. இராமனாதன் Published in The Hindu-Tamil, 19 February 2015 நகர்மயமாதலையும் புலம்பெயர்தலையும் சீனர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? இன்று சீனப் புத்தாண்டு தினம். சீனர்களின் முக்கியமான பண்டிகை இதுதான். நவம்பரில் தொடங்கும் உறைய வைக்கும் குளிர் மார்ச் மாதத்தில் முடியும். வரவிருக்கும் வசந்த காலத்தை வரவேற்கும் கொண்டாட்டமாகவும் இது அமையும். மனைவி-மக்கள்-பெற்றோர்-உறவினர்களுடன் ஒன்றுகூடி, வட்ட வடிவ மேசையைச் சுற்றி அமர்ந்து விருந்துண்பது கொண்டாட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கும். இந்தப் பண்டிகைக்காக நகரங்களில் பணியாற்றும் சுமார் 25 கோடித்Continue reading “வலசை போகும் சீனர்கள்”

அட்டன்பரோவின் திரைமொழி

மு இராமனாதன் Published in Thinnai.com, 9 February 2015 ஒரு சிலையையோ, நடனத்தையோ, ஓவியத்தையோ, கவிதையையோ ரசிப்பவர்கள் அதன் நுணுக்கங்களை ரசிக்கிறார்கள். எந்த இலக்கிய வடிவமும் உள்ளடக்கத்தைப் பார்க்கிலும் சொல்லப்படும் வகையினாலேயே சிறப்புப் பெறுகிறது. ஆனால் திரைப்படங்களில் மட்டும் அதன் அழகியலுக்குள் போகாது கதையோடு நின்று விடுகிறோம். இதற்குக் காரணம் ‘திரை மொழி’யில் தேற்சியில்லாமைதான். படிக்கத் தெரியாதவன் ஒரு சஞ்சிகையை எடுத்து எப்படிப் படங்களை மட்டும் பார்த்து விட்டு வைத்து விடுகிறானோ, அப்படித்தான் ரசிக்கத் தெரியாதவன் சினிமாவில்Continue reading “அட்டன்பரோவின் திரைமொழி”

கடவுச்சீட்டு: சில நினைவுகள்

செ.முஹம்மது யூனூஸ் Published in The Hindu-26 January 2015 உலகம் சுற்றிய பர்மிய இந்தியரின் நினைவுக் குறிப்புகள் முதல் உலகப் போருக்குப் பின்னால்தான் கடவுச்சீட்டுகள் (பாஸ்போர்ட்) மெல்லப் புழக்கத்துக்கு வந்தன. அப்போதும் இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களின் மற்ற காலனி நாடுகளுக்குப் போவதற்குக் கடவுச்சீட்டோ விசாவோ வேண்டியிருக்கவில்லை. இந்தியாவில் அறிவாளிகளுக்கு அறிவாளிகள், உழைப்பாளிகளுக்கு உழைப்பாளிகள், ராணுவத்துக்கு உயிரைக் கொடுக்கும் தியாகிகள் என எல்லோரும் கிடைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை பர்மா, மலேயா, இலங்கை, பிஜி, மாலத்தீவுகள், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என்று தமதுContinue reading “கடவுச்சீட்டு: சில நினைவுகள்”