சார்க்: போகுமிடம் வெகு தூரமுண்டு!

மு. இராமனாதன் First published in Dinamani on Tuesday, June 19, 2007 சார்க்’ (தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு) வெறும் “பேச்சு மடம்’ என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. “சார்க்’ கூட்டமைப்பு 1985 முதல் இயங்கி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு, இலங்கை ஆகிய ஏழு நாடுகள் அணி சேர்ந்தன. “சார்க்’ ஒரு பொருளாதார ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பாகத்தான் உருவாக்கப்பட்டது. பரஸ்பர அரசியல் கருத்து வேற்றுமைகள் “சார்க்’ அமைப்பிற்குள் வரலாகாது என்றும்Continue reading “சார்க்: போகுமிடம் வெகு தூரமுண்டு!”

உலகம் கவனிக்கும் ஒரு பயணம்

மு. இராமனாதன் First published in Dinamani on Monday, November 20, 2006 சீன அதிபர் ஹூ ஜின்டாவ் நவம்பர் 20 முதல், 4 தினங்களுக்கு இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். இதற்கு முன்பு சீன அதிபர் இந்தியா வந்தது பத்தாண்டுகளுக்கு முன்பு – 1996இல். சீனப் பிரதமர் வென் ஜியோபோ, 2005 ஏப்ரலில் மேற்கொண்ட இந்தியப் பயணத்திற்கு 20 மாதங்களுக்குப் பிறகு வருகிறார் ஹூ. ராஜீய உறவுகளில் இரு தேசத் தலைவர்கள் பரஸ்பரம் மாறி மாறிப்Continue reading “உலகம் கவனிக்கும் ஒரு பயணம்”

ஐ நா: இந்தியாவின் அவசியமற்ற போட்டி

மு. இராமனாதன் First published in Dinamani on Tuesday, October 17, 2006 ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலர் கோஃபி அன்னானின் பதவிக்காலம் இந்த ஆண்டோடு முடிகிறது. அடுத்த பொதுச் செயலராகப் பொறுப்பேற்கப் போகிறார் தென் கொரியாவின் வெளியுறவு அமைச்சர் பான் கி மூன். அக்டோபர் 9 அன்று ஐ.நா.வின் பாதுகாப்பு மன்றம் (Security Council) பான்-ஐத் தேர்ந்தெடுத்தது. 191 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் குழு இந்தத் தேர்வை வழிமொழிந்தது. பானுக்கு அடுத்த இடத்தில்Continue reading “ஐ நா: இந்தியாவின் அவசியமற்ற போட்டி”

மேகத்தின் மேல் ஒரு பட்டுச் சாலை

மு. இராமனாதன் First published in Dinamani on Wednesday, July 19, 2006 மீலிங்கும் தம்மானும் தபால்காரர்கள். முன்னவர் சீனர், பின்னவர் இந்தியர். இவர்கள் வாரத்தில் ஒருநாள் மட்டுமே தபால்களைப் பட்டுவாடா செய்கிறார்கள். அதுவும் ஒருவர் தனது தபால்களை அடுத்தவரிடம் கைமாற்றினால் போதுமானது. ஆனால் இந்தக் கடிதப் பரிமாற்றம் நடப்பது கடல் மட்டத்திற்கு 14,500 அடிக்கு மேல்; எலும்பை உருக்கும் குளிரில்; இமயமலைகளின் ஊடேயுள்ள நாதுல்லா எனும் எல்லைக் காவலில்! சீனாவின் திபெத் சுயாட்சிப் பகுதியையும்Continue reading “மேகத்தின் மேல் ஒரு பட்டுச் சாலை”

மத்திய ஆசியா: உறவும் போட்டியும்

மு. இராமனாதன் First published in Dinamani on Friday, June 30, 2006 ஷாங்காய் சீனாவின் நிதித் தலைநகரம் என்று அறியப்படுகிறது. இந்நகரில் ஜூன் 15 அன்று “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்’பின் (Shanghai Cooperation Organisation – SCO) ஐந்தாவது மாநாடு நடந்தது. சீனாவும் ரஷியாவும் முன்னெடுத்துச் செல்லும் SCO-வில், இவ்விரு நாடுகளுடன் மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளும் அங்கம் வகிக்கின்றன. சீனாவும் ரஷியாவும் எண்ணைய்Continue reading “மத்திய ஆசியா: உறவும் போட்டியும்”

சீனத் தலைவரின் அமெரிக்கப் பயணம்

மு. இராமனாதன் First published in Dinamani on Thursday, April 20, 2006 சீன அதிபரும் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலருமாகிய ஹூ சின்டாவ் இன்று (ஏப்ரல் 20) வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைச் சந்திக்கிறார். செப்டம்பர் 2005-ல் திட்டமிடப்பட்ட இந்தச் சந்திப்பு, சூறாவளி கத்ரீனாவினால் தள்ளிப் போனது. உலகின் ஒரே வல்லரசும் அதி வேகமாக வளரும் பொருளாதாரமும் முரண்படுகிற புள்ளிகள் அதிகம். இந்தச் சந்திப்பு இடைவெளிகளை நிரப்புமா? ஹூவிடம் புஷ் என்ன கேட்கப்Continue reading “சீனத் தலைவரின் அமெரிக்கப் பயணம்”

பறவைக் காய்ச்சல்: நோய் நாடி…

மு. இராமனாதன் First published in Dinamani on Friday, March 3, 2006 பிப்ரவரி 18 பிற்பகல் மணி 2. போபாலின் உலகப் பிரசித்தி பெற்ற விலங்கு நோய்ச் சோதனைச் சாலை. மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பர் மாவட்டம் நவபூரிலிருந்து பெறப்பட்ட 12 கோழிகளின் ரத்த மாதிரிகளைச் சோதித்ததில், அவற்றுள் எட்டில் பறவைக் காய்ச்சலுக்குக் காரணமான ஏ5ச1 வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கு முந்தைய தினங்களில் நவபூர் பண்ணைகளில் சுமார் 40,000 கோழிகள் இறந்து போயிருந்தன.Continue reading “பறவைக் காய்ச்சல்: நோய் நாடி…”

உலக வணிகத்தில் வளரும் நாடுகளின் குரல்

மு. இராமனாதன் First published in Dinamani on Tuesday, February 7, 2006 கிரோசோவிரே எனும் கிராமம் பிரான்சில் உள்ளது. இங்கு வசிக்கும் டிபேர் லெஃப்ரே ஒரு விவசாயி. 45 ஹெக்டேர் நிலத்தில் கோதுமையும், சோளமும், சணலும் பயிரிடுகிறார். இவரது 110 பசுக்களைக் கறப்பதற்கு கணினிமயப்படுத்தப்பட்ட இயந்திரங்கள் உள்ளன. 10,000 லிட்டர் பால் வரை பாதுகாக்கத் தக்க குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் இவரது பண்ணையில் உள்ளன. ஓய்வு நேரங்களில் பிரெஞ்சு இலக்கியம் படிக்கிறார் லெஃப்ரே. 25 நாடுகளின்Continue reading “உலக வணிகத்தில் வளரும் நாடுகளின் குரல்”

கிழக்கே உதயமாகும் புதிய கூட்டணி

மு. இராமனாதன் First published in Dinamani on Wednesday, December 14, 2005 இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இந்த அறுபதாண்டு காலத்தில், நாடுகளின் கூட்டமைப்புகள் உருவாகிய வண்ணம் உள்ளன. இவை பாதுகாப்பு, வணிகம், அரசியல் என பல தளங்களில் இயங்குகின்றன. தொடக்கத்தில் பகட்டான குடைகளாக விரிந்து, காலப்போக்கில் நைந்து போனவை பல; ஆரவாரமின்றித் தொடங்கி வலுவான அமைப்புகளாக வடிவெடுத்தவை சில; நிரந்தரக் கூரைகளாக உருவாகி உறுப்பு நாடுகளின் நலனைக் காப்பவை சில. ஆதலால், இன்றுContinue reading “கிழக்கே உதயமாகும் புதிய கூட்டணி”

சீனாவின் வணிக யுத்தம்

மு. இராமனாதன் First published in Dinamani on Wednesday, June 29, 2005 சீனாவின் ஷென்ஜன் நகரின் ஆயத்த ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுகிறாள் – 20 வயது லின் லின். சீனாவின் ஹூபை மாநிலத்தின் சிறிய கிராமம் ஒன்றிலிருந்து பிழைப்பிற்காக நகருக்கு வந்தவள் அவள். விளையாட்டு ஆடைத் தயாரிப்பில் புகழ்பெற்ற ஜெர்மானிய நிறுவனமான “”பூமா”விற்கு, வாரத்தில் ஆறு நாள்கள், நாளொன்றுக்கு 11 மணி நேரம் வீதம், அவள் ஜாக்கெட்டுகளைத் தைத்துக் குவிக்கிறாள். லின் லின்னைப்Continue reading “சீனாவின் வணிக யுத்தம்”