சீனத் தலைவரின் அமெரிக்கப் பயணம்

மு. இராமனாதன் First published in Dinamani on Thursday, April 20, 2006 சீன அதிபரும் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலருமாகிய ஹூ சின்டாவ் இன்று (ஏப்ரல் 20) வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைச் சந்திக்கிறார். செப்டம்பர் 2005-ல் திட்டமிடப்பட்ட இந்தச் சந்திப்பு, சூறாவளி கத்ரீனாவினால் தள்ளிப் போனது. உலகின் ஒரே வல்லரசும் அதி வேகமாக வளரும் பொருளாதாரமும் முரண்படுகிற புள்ளிகள் அதிகம். இந்தச் சந்திப்பு இடைவெளிகளை நிரப்புமா? ஹூவிடம் புஷ் என்ன கேட்கப்Continue reading “சீனத் தலைவரின் அமெரிக்கப் பயணம்”

பறவைக் காய்ச்சல்: நோய் நாடி…

மு. இராமனாதன் First published in Dinamani on Friday, March 3, 2006 பிப்ரவரி 18 பிற்பகல் மணி 2. போபாலின் உலகப் பிரசித்தி பெற்ற விலங்கு நோய்ச் சோதனைச் சாலை. மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பர் மாவட்டம் நவபூரிலிருந்து பெறப்பட்ட 12 கோழிகளின் ரத்த மாதிரிகளைச் சோதித்ததில், அவற்றுள் எட்டில் பறவைக் காய்ச்சலுக்குக் காரணமான ஏ5ச1 வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கு முந்தைய தினங்களில் நவபூர் பண்ணைகளில் சுமார் 40,000 கோழிகள் இறந்து போயிருந்தன.Continue reading “பறவைக் காய்ச்சல்: நோய் நாடி…”

உலக வணிகத்தில் வளரும் நாடுகளின் குரல்

மு. இராமனாதன் First published in Dinamani on Tuesday, February 7, 2006 கிரோசோவிரே எனும் கிராமம் பிரான்சில் உள்ளது. இங்கு வசிக்கும் டிபேர் லெஃப்ரே ஒரு விவசாயி. 45 ஹெக்டேர் நிலத்தில் கோதுமையும், சோளமும், சணலும் பயிரிடுகிறார். இவரது 110 பசுக்களைக் கறப்பதற்கு கணினிமயப்படுத்தப்பட்ட இயந்திரங்கள் உள்ளன. 10,000 லிட்டர் பால் வரை பாதுகாக்கத் தக்க குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் இவரது பண்ணையில் உள்ளன. ஓய்வு நேரங்களில் பிரெஞ்சு இலக்கியம் படிக்கிறார் லெஃப்ரே. 25 நாடுகளின்Continue reading “உலக வணிகத்தில் வளரும் நாடுகளின் குரல்”

கிழக்கே உதயமாகும் புதிய கூட்டணி

மு. இராமனாதன் First published in Dinamani on Wednesday, December 14, 2005 இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இந்த அறுபதாண்டு காலத்தில், நாடுகளின் கூட்டமைப்புகள் உருவாகிய வண்ணம் உள்ளன. இவை பாதுகாப்பு, வணிகம், அரசியல் என பல தளங்களில் இயங்குகின்றன. தொடக்கத்தில் பகட்டான குடைகளாக விரிந்து, காலப்போக்கில் நைந்து போனவை பல; ஆரவாரமின்றித் தொடங்கி வலுவான அமைப்புகளாக வடிவெடுத்தவை சில; நிரந்தரக் கூரைகளாக உருவாகி உறுப்பு நாடுகளின் நலனைக் காப்பவை சில. ஆதலால், இன்றுContinue reading “கிழக்கே உதயமாகும் புதிய கூட்டணி”

சிறகு விரிக்கும் கொள்ளை நோய்

மு. இராமனாதன் First published in Dinamani on Wednesday, November 9, 2005 1918மார்ச் 11-ஆம் தேதி அதிகாலை. அமெரிக்காவின் கான்சாஸ் ராணுவத் தளத்தின் சமையற்காரர் ஆல்பர்ட் கிட்சல் கடும் ஜலதோஷத்தினால் அவதிக்குள்ளானார். அன்று மதியத்திற்குள் 100 ஜவான்கள் காய்ச்சல், உடல்வலி, மூச்சுத் திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையை நாடினர். வார இறுதியில் நோயாளிகளின் எண்ணிக்கை 500-ஆக உயர்ந்தது. அவர்களில் யாருக்கும் இது பறவையிலிருந்து மனிதர்களுக்குத் தொற்றிய நோய் என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை. “”ஸ்பானிய ஃப்ளு”Continue reading “சிறகு விரிக்கும் கொள்ளை நோய்”

சீன-அமெரிக்க உறவுகள்

மு. இராமனாதன் First published in Dinamani on Saturday, October 22, 2005 சமீப காலத்தில் சர்வதேச ஊடகங்களில் சீன – அமெரிக்க உறவுகள் குறித்த விவாதங்கள் அதிகம் இடம்பெறுகின்றன. ஒன்று உலகின் ஒரே வல்லரசாகவும், மற்றொன்று அதிவேகமாக வளர்ந்து வரும் நாடாகவும் இருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். பரஸ்பர உறவுகள் பிரதானமாக மூன்று தளங்களில் இயங்குகின்றன என்கிறார் “டைம்’ இதழின் செய்தியாளர் அந்தோணி ஸ்பெய்த். அவை: வணிகம், தைவான் மற்றும் பயங்கரவாதம் (Three T’s:Continue reading “சீன-அமெரிக்க உறவுகள்”

சீனாவின் வணிக யுத்தம்

மு. இராமனாதன் First published in Dinamani on Wednesday, June 29, 2005 சீனாவின் ஷென்ஜன் நகரின் ஆயத்த ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுகிறாள் – 20 வயது லின் லின். சீனாவின் ஹூபை மாநிலத்தின் சிறிய கிராமம் ஒன்றிலிருந்து பிழைப்பிற்காக நகருக்கு வந்தவள் அவள். விளையாட்டு ஆடைத் தயாரிப்பில் புகழ்பெற்ற ஜெர்மானிய நிறுவனமான “”பூமா”விற்கு, வாரத்தில் ஆறு நாள்கள், நாளொன்றுக்கு 11 மணி நேரம் வீதம், அவள் ஜாக்கெட்டுகளைத் தைத்துக் குவிக்கிறாள். லின் லின்னைப்Continue reading “சீனாவின் வணிக யுத்தம்”

சீனா-ஜப்பான் : வரலாற்றுப் பாடம்

மு. இராமனாதன் First published in Dinamani on Thursday, May 19, 2005 இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் ஈட்டிய வெற்றியின் 60 ஆண்டு நிறைவைக் கொண்டாட சுமார் 50 நாடுகளின் தலைவர்கள் மே 9 அன்று மாஸ்கோவில் கூடினர். இந்த விழாவில் போரில் தோல்வியடைந்த ஜப்பானும் பங்கு பெற்றது. “எல்லோரும் இப்போது நண்பர்கள்’ என்பது ஜப்பான் உலகுக்குச் சொல்ல விழையும் செய்தி. ஆனால் ஒரு மாதம் முன்பு – ஏப்ரல் 9ஆம் தேதிContinue reading “சீனா-ஜப்பான் : வரலாற்றுப் பாடம்”

சீனா-வாடிகன் உறவு

மு. இராமனாதன் First published in Dinamani on Wednesday, April 20, 2005 ஏப்ரல் 8 அன்று வாடிகன் நகர வீதிகள் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்களால் தளும்பியது. அன்றுதான் புனித பீட்டர் சதுக்கத்தில் போப் 2-வது ஜான் பாலின் ஈமச் சடங்குகள் நடந்தன. 100-க்கும் மேற்பட்ட தேசங்களின் அரசர்கள், ராணிகள், தலைவர்கள் பிரார்த்தனையில் பங்கேற்றனர். அந்த வரிசையில் மக்கள் சீனக் குடியரசின் பிரதிநிதி யாருமில்லை. சீனாவுக்கும் வாடிகனுக்கும் அரை நூற்றாண்டு காலமாக ராஜீய உறவுகள்Continue reading “சீனா-வாடிகன் உறவு”

மக்கள் தொகை: சீனத்தின் நிலை

மு. இராமனாதன் First published in Dinamani on Wednesday March 23, 2005 நீண்டகாலமாக மக்கள்தொகையில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் இருந்து வருகிறது இந்தியா. சமீபத்தில் வெளியான 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை 102.7 கோடி (தற்போதைய மதிப்பீடு 107 கோடி). ஆயின், இந்தியாவின் மக்கள்தொகை சீனாவைவிட இரண்டரை மடங்கு அடர்த்தியானது. 96 லட்சம் சதுர கிலோமீட்டர் பரந்து கிடக்கும் சீனாவில், சராசரியாக ஒவ்வொரு ச.கிமீ பரப்பிலும் 135 பேர் வாழும்போது, இந்தியாவின்Continue reading “மக்கள் தொகை: சீனத்தின் நிலை”