அடுக்கக விதிகளை விரிவுபடுத்துவோம்

மு. இராமனாதன் Published in The Hindu Tamil- July 10, 2015 வெளிநாடுகளில் இருப்பதுபோன்ற கட்டுமான விதிகள் இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டு ஜூன் 28 அன்று அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. 61 பேர் பலியாயினர். மவுலிவாக்கம் என்ற பெயர் சென்னையைத் தாண்டி, இந்தியாவைக் கடந்து, உலக நாக்குகளில் புரண்டது. இந்த விபத்துக்கு விதிமீறல்கள்தான் காரணம் என்றனர் சிலர். சென்னையில் அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கான ஒப்புதல்கள்Continue reading “அடுக்கக விதிகளை விரிவுபடுத்துவோம்”

தொடுதிரை அடிமைகள்

மு. இராமனாதன் Published in The Hindu Tamil- June 17, 2015 உங்களிடம் தொடுதிரை மோகம் அதிகமாக இருந்தால் உங்களுக்கு நோமோ-ஃபோபியா என்ற நோய் இருக்கிறது ஒரு தமிழறிஞர் என்னிடம் சொன்னார்: “வள்ளுவர் தொட்டனைத்து ஊறும் அறிவு என்று சொல்கிறார். அந்தக் காலத்தில் அவர் தொடுதிரைகளைப் பற்றிச் சிந்தித்திருக்க முடியாதுதான். ஆனால், இன்று ஸ்மார்ட்போன் திரையைத் தொட்டால் தகவல்கள் ஊறிப் பெருகி வழிந்தோடுகிறதல்லவா? இப்படியாக வள்ளுவர் எல்லாக் காலத்துக்கும் பொருத்தமாக விளங்குகிறார்”. அறிஞர் வள்ளுவரைப் பற்றிச் சொன்னதைContinue reading “தொடுதிரை அடிமைகள்”

நம் கல்வி… நம் உரிமை!- நடுவில் தொலைந்துபோன பக்கங்கள்

மு. இராமனாதன் Published in The Hindu-Tamil, 14 May 2015 அந்தக் காலத்தில் +2 இல்லை. பள்ளிப் படிப்பு பதினோராம் வகுப்போடு முடியும். அது எஸ்.எஸ்.எல்.சி. எனப்பட்டது. பள்ளிப் படிப்பையும் பட்டப் படிப்பையும் இணைக்கும் ஓராண்டுப் படிப்பு பி.யூ.சி. எனப்பட்டது. இதைக் கலைக் கல்லூரிகளில் படிக்க வேண்டும். ஆக 10, 11, 12 என ஒவ்வொரு வகுப்பையும் தனித்தனியாகப் படித்துத் தேற வேண்டும். 10-ம் வகுப்புக்கும் 12-ம் வகுப்புக்கும் நடுவில், கொஞ்சமல்ல, 11-ம் வகுப்புப் பாடங்கள் முழுவதையும்Continue reading “நம் கல்வி… நம் உரிமை!- நடுவில் தொலைந்துபோன பக்கங்கள்”

காந்தியை ஏமாற்றிவரும் இந்தியா

மு. இராமனாதன் Published in The Hindu Tamil- May 8, 2015 சட்டத்தை மீறக் கூடாது என்ற உணர்வு ஹாங்காங் கல்விமுறையின் அடிப்படை போதனைகளுள் ஒன்று! கடந்த வாரம் ஹாங்காங்கில் ஓர் இந்திய அங்காடிக்குப் போயிருந்தேன். பொருட்களை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்றேன். எனக்கு முன்னால் ஓர் இளம்பெண். கைபேசியில் தனது மூன்று வயது மகனின் குறும்புகளைப் பற்றிப் பெருமையாக அலுத்துக்கொண்டிருந்தார்- ஆங்கிலத்தில். கடைக்காரர் அந்தப் பெண் வாங்கியிருந்த காய்கறிகள், மளிகைப் பொருட்கள், நறுமணப் பொருட்கள், தின்பண்டங்கள் முதலானவற்றைத்Continue reading “காந்தியை ஏமாற்றிவரும் இந்தியா”

இலங்கை – சீனா – இந்தியா

மு. இராமனாதன் Published in The Hindu-Tamil, 25 April 2015 இலங்கையால் சீனாவைப் புறக்கணிக்க முடியாது; இந்தியாவுக்கும் இலங்கையுடனான அணுக்கம் அவசியம். மார்ச் மாத இறுதியில் இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா சீனாவுக்கு வருகை தந்தார். அவருக்கு பெய்ஜிங் மக்கள் மாமன்றத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங். கடந்த செப்டம்பர் மாதம் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ‘கொழும்பு துறைமுக நகரம்’ எனும் திட்டத்தைத் தன் சொந்தக் கரங்களால் தொடங்கி வைத்திருந்தார் சீனContinue reading “இலங்கை – சீனா – இந்தியா”

ஒரு கோடிப் புத்தகங்கள்

மு. இராமனாதன் Published in The Hindu Tamil, 1 April 2015 நூலகங்களில் செய்யப்படுகிற முதலீடு வாழ்நாள் முழுதும் கற்கிற அறிவுலகத்தை உருவாக்கும். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஹாங்காங்கில் நடந்தது. எனது நூலக அட்டை தொலைந்து விட்டது. அப்போது புறநகர் ஒன்றின் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு மாறியிருந்தோம். வீடு மாற்றும்போது தவறியிருக்க வேண்டும். புதிய வீட்டிலிருந்து 10 நிமிட நடை தூரத்தில் நூலகம் இருந்தது. ஹாங்காங்கில் மக்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளின் மையத்தில் நூலகங்கள் இருக்கும். வரவேற்பில் இருந்தContinue reading “ஒரு கோடிப் புத்தகங்கள்”

வலசை போகும் சீனர்கள்

மு. இராமனாதன் Published in The Hindu-Tamil, 19 February 2015 நகர்மயமாதலையும் புலம்பெயர்தலையும் சீனர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? இன்று சீனப் புத்தாண்டு தினம். சீனர்களின் முக்கியமான பண்டிகை இதுதான். நவம்பரில் தொடங்கும் உறைய வைக்கும் குளிர் மார்ச் மாதத்தில் முடியும். வரவிருக்கும் வசந்த காலத்தை வரவேற்கும் கொண்டாட்டமாகவும் இது அமையும். மனைவி-மக்கள்-பெற்றோர்-உறவினர்களுடன் ஒன்றுகூடி, வட்ட வடிவ மேசையைச் சுற்றி அமர்ந்து விருந்துண்பது கொண்டாட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கும். இந்தப் பண்டிகைக்காக நகரங்களில் பணியாற்றும் சுமார் 25 கோடித்Continue reading “வலசை போகும் சீனர்கள்”

கடவுச்சீட்டு: சில நினைவுகள்

செ.முஹம்மது யூனூஸ் Published in The Hindu-26 January 2015 உலகம் சுற்றிய பர்மிய இந்தியரின் நினைவுக் குறிப்புகள் முதல் உலகப் போருக்குப் பின்னால்தான் கடவுச்சீட்டுகள் (பாஸ்போர்ட்) மெல்லப் புழக்கத்துக்கு வந்தன. அப்போதும் இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களின் மற்ற காலனி நாடுகளுக்குப் போவதற்குக் கடவுச்சீட்டோ விசாவோ வேண்டியிருக்கவில்லை. இந்தியாவில் அறிவாளிகளுக்கு அறிவாளிகள், உழைப்பாளிகளுக்கு உழைப்பாளிகள், ராணுவத்துக்கு உயிரைக் கொடுக்கும் தியாகிகள் என எல்லோரும் கிடைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை பர்மா, மலேயா, இலங்கை, பிஜி, மாலத்தீவுகள், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என்று தமதுContinue reading “கடவுச்சீட்டு: சில நினைவுகள்”

இரண்டு புத்தகக் காட்சிகள்

மு. இராமனாதன் Published in The Hindu – Tamil, 11 January 2015 பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் புத்தக ஆர்வலர்களும் பரவசத்தோடு எதிர்நோக்கிய 38-வது சென்னைப் புத்தகக் காட்சி தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டு இரண்டு லட்சம் சதுர அடிப்பரப்பில், 440 விற்பனையாளர்கள் புத்தகங்களை அடுக்கி வைத் திருந்தார்கள். 10 லட்சம் பேர் வருகை தந்தனர். ரூ.15 கோடி மதிப்பிலான 30 லட்சம் புத்தகங்கள் விற்பனையாயின. சராசரியாக ஒவ்வொரு பார்வையாளரும் ரூ.150-க்கு புத்தகங்கள் வாங்கியதாகக் கொள்ளலாம். மகிழ்ச்சிதான். அசோகமித்திரன் சுமார்Continue reading “இரண்டு புத்தகக் காட்சிகள்”

ஹாங்காங்கில் ஜனநாயகமும் சட்டமும்

மு. இராமனாதன் Published in The Hindu – Tamil, 16 December 2014 ஜனநாயகத்தை விரிவுபடுத்தும் உரையாடல் ஹாங்காங்கில் சாத்தியமாகியிருக்கிறது.இரண்டரை மாதங்கள் நீண்ட ஹாங்காங் மாணவர்களின் சாலை ஆக்கிரமிப்புப் போராட்டம் நேற்றோடு முடிவுக்கு வந்திருக்கிறது. கூடுதல் ஜனநாயகத்துக்காகப் போராடும் மாணவர்கள் செப்டம்பர் இறுதியில் நகரின் மூன்று பிரதானப் பகுதிகளின் சாலைகளை ஆக்கிரமித்தார்கள். இரண்டு பகுதிகளின் ஆக்கிரமிப்பை அகற்றிய போலீஸார், மூன்றாவது பகுதியின் சாலைகளை நேற்று திறந்துவிட்டார்கள்.இந்த மூன்று பகுதிகளின் ஆறு வழிப் பாதைகளிலும் மாணவர்கள் கூடாரம் அமைத்தார்கள்.Continue reading “ஹாங்காங்கில் ஜனநாயகமும் சட்டமும்”