எழுத்து ஒரு சொத்தா?

மு. இராமனாதன் Published in The Hindu – Tamil, 28 November 2014 எழுத்தாளர்களை மதிக்காத சமூகத்தில்தான் காப்புரிமை அதிகமாக மீறப்படுகிறது.என் வீட்டின் வாசிப்பறையில் அமர்ந்தபடி இந்தக் கட்டுரையைத் தட்டச்சு செய்கிறேன். இந்த வீடு, இன்னும் வங்கிக் கடன் கட்டி முடிக்கவில்லை என்றாலும், என் பெயரில்தான் இருக்கிறது. ஆகவே, என்னுடைய சொத்து. யாரும் மறுக்க மாட்டார்கள். இந்த மேசை, நாற்காலி, கணினி போன்றவையும், ஹாங்காங்கில் பழைய சாமான்களை யாரும் வாங்க மாட்டார்கள் என்றாலும், என் சொத்துக்கள்தாம். யாரும்Continue reading “எழுத்து ஒரு சொத்தா?”

சீர்திருத்தப் பாதையில் மியான்மர்

மு. இராமனாதன் Published in The Hindu – Tamil, 11 November 2014 ஜனநாயகத்தை நோக்கி முன்னேறும் மியான்மரை உலக நாடுகளும் பர்மியத் தமிழர்களும் எப்படி எதிர்கொள்கிறார்கள்?இன்று மியான்மரில் 18 நாடுகளின் தலைவர்கள் கூடுகிறார்கள். ராணுவத் தளபதிகளால் மியான்மர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட பர்மாவில் நடைபெறும் கிழக்காசிய மாநாட்டுக்காக ஒபாமா, மோடி உள்ளிட்ட சர்வதேசத் தலைவர்கள் வருகைதந்திருக்கிறார்கள். இப்படியொரு மாநாடு மியான்மரில் நடக்குமென்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அப்போது ராணுவContinue reading “சீர்திருத்தப் பாதையில் மியான்மர்”

ஹாங்காங்கின் எதிர்க்குரல் நியாயமானதா?

மு. இராமனாதன் Published in The Hindu – Tamil, 13 October 2014 ஹாங்காங் போராட்டம்குறித்து மேலைநாட்டு ஊடகங்கள் முன்வைப்பது தவறான பார்வை.ஹாங்காங் மாணவர்கள் கூடுதல் ஜனநாயகத்துக்காகப் போராடிவருகிறார்கள். இதனால் ஹாங்காங் மூன்றாவது முறையாக உலகச் செய்திகளில் மையம் கொண்டிருக்கிறது. ஊடகங்களின் வெளிச்சம் முதன்முறையாக ஹாங்காங்கின் மீது பரவியது 1997 ஜூன் 30 நள்ளிரவில். அபினி யுத்தத்தில் ஹாங்காங்கைக் கைப்பற்றிய பிரிட்டன், ஒன்றரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்குத் திரும்பக் கொடுத்த வைபவம் அந்த இரவில் நிகழ்ந்தது.Continue reading “ஹாங்காங்கின் எதிர்க்குரல் நியாயமானதா?”

பார்வையற்றோரைப் புறக்கணிக்கும் தேசம்

மு. இராமனாதன் Published in The Hindu – Tamil, 29 September 2014 கல்வியும் தொழில்நுட்பமும் பார்வையற்றோருக்கு இரண்டு கண்களாக இருக்க முடியும்.சுகன்யா. இந்தியாவின் லட்சக்கணக்கான பார்வையற்ற பெண்களில் ஒருவர். மழை பொய்த்த ராமநாதபுர மாவட்டத்தில் இன்னும் பேருந்துகள் போகத் தொடங்கியிராத ஒரு குக்கிராமம் அவரது ஊர். எளிய விவசாயக் குடும்பம். படிப்பில் அவருக்கு இருந்த ஆர்வத்தின் முன்னால் இவை எதுவும் தடையாக இல்லை. பக்கத்து ஊர்களில் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். மதிப்பெண்கள் குவிந்தன.Continue reading “பார்வையற்றோரைப் புறக்கணிக்கும் தேசம்”

உலகின் தொழிற்சாலை ஆகுமா இந்தியா?

மு. இராமனாதன் Published in The Hindu – Tamil, 25 September 2014 மனிதவளம் இருந்தால் மட்டும் போதாது; வாழ்க்கைத் தரமும் முக்கியம்.உலகின் புகழ்பெற்ற தொழிலதிபர்கள் இன்று புதுடெல்லியில் கூடியிருக்கின்றனர். “வாருங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்” என்று அவர்களிடம் அழைப்பு விடுக்கிறார் பிரதமர் மோடி. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் உலகெங்கும் உலா வர வேண்டும் என்கிற தனது கனவை, செங்கோட்டையில் நிகழ்த்திய சுதந்திர தின உரையில் பிரதமர் தெரிவித்தார்.இப்போது இந்தியாவில் அந்நிய நிறுவனங்கள் அதிகமாக நிறுவியிருப்பவைContinue reading “உலகின் தொழிற்சாலை ஆகுமா இந்தியா?”

ஹாங்காங் தமிழர்கள் காட்டும் வழி

மு. இராமனாதன் Published in The Hindu – Tamil, 11 August 2014 குழந்தைகளுக்குத் தமிழுணர்வை ஊட்டுவதை ஹாங்காங் தமிழர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்!தாய்மொழிக் கல்வியின் மகத்துவத்தை உலகெங்கும் உள்ள மொழியியல் அறிஞர்கள் உரக்கச் சொல்லிவருகிறார்கள். என்றாலும், ஆங்கில மோகத்தில் திளைக்கும் இந்தியத் தமிழர்களின் செவிகளில் அது விழுவதில்லை. தமிழை இரண்டாம் பாடமாகக்கூடப் படிக்காத ஒரு தலைமுறை தமிழ்நாட்டு நகரங்களில் உருவாகிவிட்டது.ஆனால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் கணிசமானோர் தமது பாரம்பரியத்தின் வேர்கள் தாய்மொழியில் இருப்பதை உணர்ந்திருக்கிறார்கள். அதனால், தமதுContinue reading “ஹாங்காங் தமிழர்கள் காட்டும் வழி”

மவுலிவாக்கம் விபத்து: பொறியியலும் பாதுகாப்பும்

மு. இராமனாதன் Published in The Hindu – Tamil, 23 July 2014 இந்தியாவில் கட்டிடங்கள் கட்டுவதில் உள்ள குளறுபடிகளைப் பற்றி ஹாங்காங் பொறியாளரின் அலசல்.மவுலிவாக்கம் விபத்துகுறித்துச் செய்தி வெளியிட்ட ஹாங்காங் நாளிதழ் ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’, ‘கட்டிடங்கள் இடிந்து விழுவது இந்தியாவில் சாதாரணம்’ என்று எழுதியது. அதை நிரூபிப்பதுபோல், மவுலிவாக்கத்திலிருந்து மீட்புக் குழுவினர் வெளியேறிக்கொண்டிருந்தபோது திருவள்ளூர் அருகே ஒரு சேமிப்புக் கிடங்கின் சுற்றுச்சுவர் இடிந்து 11 பேர் உயிரிழந்தனர். மவுலிவாக்கம் விபத்து நிகழ்வதற்குச் சிலContinue reading “மவுலிவாக்கம் விபத்து: பொறியியலும் பாதுகாப்பும்”