மு. இராமனாதன் First published in Dinamani on Thursday, August 24, 2006 அமெரிக்காவின் சியாட்டில் நகரில் 1999-இல் உலக வணிக அமைப்பின் (World trade Organisation- WTO) அமைச்சரவை மாநாட்டின்போது நடந்த கிளர்ச்சிகள் பிரபலமானவை. போராட்டக்காரர்களின் முக்கியக் குற்றச்சாட்டு, கட்டற்ற வணிகம் எனும் நஞ்சை, வளரும் நாடுகளின் வாயில் அமெரிக்கா புகட்டுகிறது என்பதாக இருந்தது. ஆனால் கட்டற்ற வணிகம் எனும் இலக்கை அடைய பெருந்தடையே அமெரிக்காதான் என்பது இப்போது தெளிவாகியிருக்கிறது. ஜூலை கடைசி வாரத்தில்Continue reading “உலக வணிகம் எட்டாக் கனியா?”
Author Archives: Mu Ramanathan
மேகத்தின் மேல் ஒரு பட்டுச் சாலை
மு. இராமனாதன் First published in Dinamani on Wednesday, July 19, 2006 மீலிங்கும் தம்மானும் தபால்காரர்கள். முன்னவர் சீனர், பின்னவர் இந்தியர். இவர்கள் வாரத்தில் ஒருநாள் மட்டுமே தபால்களைப் பட்டுவாடா செய்கிறார்கள். அதுவும் ஒருவர் தனது தபால்களை அடுத்தவரிடம் கைமாற்றினால் போதுமானது. ஆனால் இந்தக் கடிதப் பரிமாற்றம் நடப்பது கடல் மட்டத்திற்கு 14,500 அடிக்கு மேல்; எலும்பை உருக்கும் குளிரில்; இமயமலைகளின் ஊடேயுள்ள நாதுல்லா எனும் எல்லைக் காவலில்! சீனாவின் திபெத் சுயாட்சிப் பகுதியையும்Continue reading “மேகத்தின் மேல் ஒரு பட்டுச் சாலை”
“ஹாங்காங் தமிழ்க் கல்வியின் மேன்மை அதன் தொடர்ச்சியில் இருக்கிறது”
மு இராமனாதன் First published in Thinnai on Thursday July 13, 2006 ஒரு வருடம் இருக்கும். நண்பர் ஒருவர் கேட்டார்: “திண்ணையில் படைப்புகளுக்குக் கீழ் எழுதியவரின் மின்னஞ்சல் முகவரி வருகிறதே, உங்களுக்கு யாரேனும் எழுதியிருக்கிறார்களா?”. நல்ல காலமாக ‘ஆம்’ என்று சொல்ல முடிந்தது. அதற்குச் சில நாட்கள் முன்னர்தான் “ஹாங்காங்கில் தமிழ்க் கல்வி” என்ற கட்டுரை வந்திருந்தது. ‘இளம் இந்திய நண்பர்கள் குழு’ எனும் அமைப்பினர் மிகுந்த பிரயத்தனங்களுடன் முறையான தமிழ் வகுப்புகளை ஹாங்காங்கில் நடத்துவதும், பிள்ளைகள்Continue reading ““ஹாங்காங் தமிழ்க் கல்வியின் மேன்மை அதன் தொடர்ச்சியில் இருக்கிறது””
மத்திய ஆசியா: உறவும் போட்டியும்
மு. இராமனாதன் First published in Dinamani on Friday, June 30, 2006 ஷாங்காய் சீனாவின் நிதித் தலைநகரம் என்று அறியப்படுகிறது. இந்நகரில் ஜூன் 15 அன்று “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்’பின் (Shanghai Cooperation Organisation – SCO) ஐந்தாவது மாநாடு நடந்தது. சீனாவும் ரஷியாவும் முன்னெடுத்துச் செல்லும் SCO-வில், இவ்விரு நாடுகளுடன் மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளும் அங்கம் வகிக்கின்றன. சீனாவும் ரஷியாவும் எண்ணைய்Continue reading “மத்திய ஆசியா: உறவும் போட்டியும்”
விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை
மு. இராமனாதன் First published in Dinamani on May 31, 2006 திருவிழா முடிந்துவிட்டது. தோரணங்கள், கட் – அவுட்கள் அகற்றப்பட்டு விட்டன. எனினும் இன்னமும் காற்றில் மிச்சமிருக்கும் இலவச வாக்குறுதிகள் சில தினங்களுக்கேனும் ஞாபகத்தில் இருக்கும். எல்லாத் தேர்தல்களையும் போலவே இந்த முறையும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து பொதுநல ஆர்வலர்கள் எழுப்பிய குரலை ஒலிபெருக்கிச் சத்தங்களுக்கிடையிலும் கேட்க முடிந்தது. அவற்றுள் தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துவது, கட்சிகள் நடத்தை விதிகளைக் கடைப்பிடிப்பது போன்றவையே அதிகம் பேசப்பட்டன.Continue reading “விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை”
மும்பையின் ஷாங்காய்க் கனவுகள்
மு. இராமனாதன் First published in Kalachuvadu, May 2006. 2005 மார்ச் 18 அன்று மும்பையில் கருத்தரங்கொன்றைத் துவக்கி வைத்த பிரதமர் மன்மோகன் சிங், மும்பை ஆசியாவின் நிதித் தலைநகரமாகத் தகுதியானது என்றார். பூகோள ரீதியில் அதன் இருப்பும் நகரின் நிதி வளமும் மக்களின் திறனும் மும்பையின் தரத்தை உயர்த்தும் என்றார். அதன் பலவீனமான உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். “மும்பையை ஷாங்காய் ஆக்குவோம்” எனும் திட்டத்தை வழிமொழியவும் அவர் மறக்கவில்லை. 2004Continue reading “மும்பையின் ஷாங்காய்க் கனவுகள்”
சீனத் தலைவரின் அமெரிக்கப் பயணம்
மு. இராமனாதன் First published in Dinamani on Thursday, April 20, 2006 சீன அதிபரும் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலருமாகிய ஹூ சின்டாவ் இன்று (ஏப்ரல் 20) வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைச் சந்திக்கிறார். செப்டம்பர் 2005-ல் திட்டமிடப்பட்ட இந்தச் சந்திப்பு, சூறாவளி கத்ரீனாவினால் தள்ளிப் போனது. உலகின் ஒரே வல்லரசும் அதி வேகமாக வளரும் பொருளாதாரமும் முரண்படுகிற புள்ளிகள் அதிகம். இந்தச் சந்திப்பு இடைவெளிகளை நிரப்புமா? ஹூவிடம் புஷ் என்ன கேட்கப்Continue reading “சீனத் தலைவரின் அமெரிக்கப் பயணம்”
பறவைக் காய்ச்சல்: நோய் நாடி…
மு. இராமனாதன் First published in Dinamani on Friday, March 3, 2006 பிப்ரவரி 18 பிற்பகல் மணி 2. போபாலின் உலகப் பிரசித்தி பெற்ற விலங்கு நோய்ச் சோதனைச் சாலை. மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பர் மாவட்டம் நவபூரிலிருந்து பெறப்பட்ட 12 கோழிகளின் ரத்த மாதிரிகளைச் சோதித்ததில், அவற்றுள் எட்டில் பறவைக் காய்ச்சலுக்குக் காரணமான ஏ5ச1 வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கு முந்தைய தினங்களில் நவபூர் பண்ணைகளில் சுமார் 40,000 கோழிகள் இறந்து போயிருந்தன.Continue reading “பறவைக் காய்ச்சல்: நோய் நாடி…”
உலக வணிகத்தில் வளரும் நாடுகளின் குரல்
மு. இராமனாதன் First published in Dinamani on Tuesday, February 7, 2006 கிரோசோவிரே எனும் கிராமம் பிரான்சில் உள்ளது. இங்கு வசிக்கும் டிபேர் லெஃப்ரே ஒரு விவசாயி. 45 ஹெக்டேர் நிலத்தில் கோதுமையும், சோளமும், சணலும் பயிரிடுகிறார். இவரது 110 பசுக்களைக் கறப்பதற்கு கணினிமயப்படுத்தப்பட்ட இயந்திரங்கள் உள்ளன. 10,000 லிட்டர் பால் வரை பாதுகாக்கத் தக்க குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் இவரது பண்ணையில் உள்ளன. ஓய்வு நேரங்களில் பிரெஞ்சு இலக்கியம் படிக்கிறார் லெஃப்ரே. 25 நாடுகளின்Continue reading “உலக வணிகத்தில் வளரும் நாடுகளின் குரல்”
கிழக்கே உதயமாகும் புதிய கூட்டணி
மு. இராமனாதன் First published in Dinamani on Wednesday, December 14, 2005 இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இந்த அறுபதாண்டு காலத்தில், நாடுகளின் கூட்டமைப்புகள் உருவாகிய வண்ணம் உள்ளன. இவை பாதுகாப்பு, வணிகம், அரசியல் என பல தளங்களில் இயங்குகின்றன. தொடக்கத்தில் பகட்டான குடைகளாக விரிந்து, காலப்போக்கில் நைந்து போனவை பல; ஆரவாரமின்றித் தொடங்கி வலுவான அமைப்புகளாக வடிவெடுத்தவை சில; நிரந்தரக் கூரைகளாக உருவாகி உறுப்பு நாடுகளின் நலனைக் காப்பவை சில. ஆதலால், இன்றுContinue reading “கிழக்கே உதயமாகும் புதிய கூட்டணி”