மு. இராமனாதன் First published in Dinamani on Wednesday, November 9, 2005 1918மார்ச் 11-ஆம் தேதி அதிகாலை. அமெரிக்காவின் கான்சாஸ் ராணுவத் தளத்தின் சமையற்காரர் ஆல்பர்ட் கிட்சல் கடும் ஜலதோஷத்தினால் அவதிக்குள்ளானார். அன்று மதியத்திற்குள் 100 ஜவான்கள் காய்ச்சல், உடல்வலி, மூச்சுத் திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையை நாடினர். வார இறுதியில் நோயாளிகளின் எண்ணிக்கை 500-ஆக உயர்ந்தது. அவர்களில் யாருக்கும் இது பறவையிலிருந்து மனிதர்களுக்குத் தொற்றிய நோய் என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை. “”ஸ்பானிய ஃப்ளு”Continue reading “சிறகு விரிக்கும் கொள்ளை நோய்”
Author Archives: Mu Ramanathan
சீன-அமெரிக்க உறவுகள்
மு. இராமனாதன் First published in Dinamani on Saturday, October 22, 2005 சமீப காலத்தில் சர்வதேச ஊடகங்களில் சீன – அமெரிக்க உறவுகள் குறித்த விவாதங்கள் அதிகம் இடம்பெறுகின்றன. ஒன்று உலகின் ஒரே வல்லரசாகவும், மற்றொன்று அதிவேகமாக வளர்ந்து வரும் நாடாகவும் இருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். பரஸ்பர உறவுகள் பிரதானமாக மூன்று தளங்களில் இயங்குகின்றன என்கிறார் “டைம்’ இதழின் செய்தியாளர் அந்தோணி ஸ்பெய்த். அவை: வணிகம், தைவான் மற்றும் பயங்கரவாதம் (Three T’s:Continue reading “சீன-அமெரிக்க உறவுகள்”
சீனாவின் வணிக யுத்தம்
மு. இராமனாதன் First published in Dinamani on Wednesday, June 29, 2005 சீனாவின் ஷென்ஜன் நகரின் ஆயத்த ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுகிறாள் – 20 வயது லின் லின். சீனாவின் ஹூபை மாநிலத்தின் சிறிய கிராமம் ஒன்றிலிருந்து பிழைப்பிற்காக நகருக்கு வந்தவள் அவள். விளையாட்டு ஆடைத் தயாரிப்பில் புகழ்பெற்ற ஜெர்மானிய நிறுவனமான “”பூமா”விற்கு, வாரத்தில் ஆறு நாள்கள், நாளொன்றுக்கு 11 மணி நேரம் வீதம், அவள் ஜாக்கெட்டுகளைத் தைத்துக் குவிக்கிறாள். லின் லின்னைப்Continue reading “சீனாவின் வணிக யுத்தம்”
சீனா-ஜப்பான் : வரலாற்றுப் பாடம்
மு. இராமனாதன் First published in Dinamani on Thursday, May 19, 2005 இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் ஈட்டிய வெற்றியின் 60 ஆண்டு நிறைவைக் கொண்டாட சுமார் 50 நாடுகளின் தலைவர்கள் மே 9 அன்று மாஸ்கோவில் கூடினர். இந்த விழாவில் போரில் தோல்வியடைந்த ஜப்பானும் பங்கு பெற்றது. “எல்லோரும் இப்போது நண்பர்கள்’ என்பது ஜப்பான் உலகுக்குச் சொல்ல விழையும் செய்தி. ஆனால் ஒரு மாதம் முன்பு – ஏப்ரல் 9ஆம் தேதிContinue reading “சீனா-ஜப்பான் : வரலாற்றுப் பாடம்”
சீனா-வாடிகன் உறவு
மு. இராமனாதன் First published in Dinamani on Wednesday, April 20, 2005 ஏப்ரல் 8 அன்று வாடிகன் நகர வீதிகள் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்களால் தளும்பியது. அன்றுதான் புனித பீட்டர் சதுக்கத்தில் போப் 2-வது ஜான் பாலின் ஈமச் சடங்குகள் நடந்தன. 100-க்கும் மேற்பட்ட தேசங்களின் அரசர்கள், ராணிகள், தலைவர்கள் பிரார்த்தனையில் பங்கேற்றனர். அந்த வரிசையில் மக்கள் சீனக் குடியரசின் பிரதிநிதி யாருமில்லை. சீனாவுக்கும் வாடிகனுக்கும் அரை நூற்றாண்டு காலமாக ராஜீய உறவுகள்Continue reading “சீனா-வாடிகன் உறவு”
மக்கள் தொகை: சீனத்தின் நிலை
மு. இராமனாதன் First published in Dinamani on Wednesday March 23, 2005 நீண்டகாலமாக மக்கள்தொகையில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் இருந்து வருகிறது இந்தியா. சமீபத்தில் வெளியான 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை 102.7 கோடி (தற்போதைய மதிப்பீடு 107 கோடி). ஆயின், இந்தியாவின் மக்கள்தொகை சீனாவைவிட இரண்டரை மடங்கு அடர்த்தியானது. 96 லட்சம் சதுர கிலோமீட்டர் பரந்து கிடக்கும் சீனாவில், சராசரியாக ஒவ்வொரு ச.கிமீ பரப்பிலும் 135 பேர் வாழும்போது, இந்தியாவின்Continue reading “மக்கள் தொகை: சீனத்தின் நிலை”
Arunachalam awarded Pravasi Bharathiya Samman Award
அருணாச்சலத்திற்கு பிரவசி பாரதிய சம்மான் விருது ஹாங்காங் வணிகரும் தொழிலதிபருமான திரு. எம். அருணாச்சலத்திற்கு இந்திய அரசு, சிறந்த வெளிநாட்டு இந்தியர்களுக்கு வழங்கப்படும் ‘பிரவசி பாராதிய சம்மான்’ விருதினை ஜனவரி 2005இல் வழங்கியது. ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் 19 மார்ச் 2005 அன்று அவருக்குப் பாராட்டு விழா நிகழ்த்தியது. அது போது மு இராமனாதன் வழங்கிய பாராட்டுரை. அன்பு நெஞ்சங்களுக்குத் தலை வணங்குகிறேன்! ‘பிரவசி பாரதிய சம்மான்’ என்கிற இந்த விருது திரு.அருணாச்சலம் அவர்களுக்கு, இந்தContinue reading “Arunachalam awarded Pravasi Bharathiya Samman Award”
ஹாங்காங்கில் தமிழ்க் கல்வி
மு இராமனாதன் First published in Thinnai on Sunday February 6, 2005 கதிஜா ஹாங்காங்கின் ஆரம்பப் பள்ளியொன்றில் இரண்டாம் வகுப்புப் படிக்கிறாள். ஓராண்டுக்கு முன்பு வரை இவளது சனிக்கிழமைகள் வெகு சாவதானமாகவே விடியும். பகல் பொழுது, வீடியோ விளையாட்டும் தொலைக்காட்சிக் கார்ட்டூனுமாய் சோம்பல் முறித்தபடி நகரும். மதிய உணவு வேளை மூன்று மணிக்குத்தான் வரும். ஆனால் இப்போதெல்லாம் கதிஜா சனிக்கிழமை காலையில் வீட்டுப்பாடம் எழுதத் தொடங்கி விடுகிறாள்; உச்சிப் பொழுது உணவு வேளை; இரண்டுContinue reading “ஹாங்காங்கில் தமிழ்க் கல்வி”
சுனாமி: அழிவில் துலங்கிய ஹாங்காங் முகம்
மு இராமனாதன் First published in Thinnai on Thursday January 13, 2005 இந்துமாக் கடலாழத்திலிருந்து சீறிப் புறப்பட்ட அலைகள் திக்குகளெட்டுஞ் சிதறியது. மனித உயிர்களின் எண்ணிக்கை ஆயிரங்களிற் தொடங்கி, பதினாயிரங்களாய்ப் பெருகி, இலட்சத்தைத் தாண்டிப் புள்ளி விவரங்களிற் புதைந்து போனது. மனித எத்தனங்களின் அபத்தமும், வாழ்வின் அற்பமும் புலனாயின. உலக நாடுகளின் உதவிக் கரங்கள் நீண்டன. ஹாங்காங் அரசும் இந்தப் பட்டியலில் இணைந்து கொண்டது. ஆனால் ஹாங்காங் இன்று தனித்து நிற்பது அதன் மக்களின்Continue reading “சுனாமி: அழிவில் துலங்கிய ஹாங்காங் முகம்”
விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் ஹாங்காங் தேர்தலும்
மு இராமனாதன் First published in Thinnai on Thursday October 14, 2004 ஹாங்காங்கில் செப்டம்படர் 12 நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ (proportional representation-PR) முறைப் பின்பற்றப்பட்டது. இந்த முறையை ஆதரித்தும் எதிர்த்தும் ஜனநாயக நாடுகளில் குரல்கள் ஒலித்தவண்ணம் இருக்கின்றன.ஹாங்காங் தேர்தலையும் அதன் முடிவுகளையும் பரிசீலிப்பது PR முறையின் சாதக பாதகங்களை நெருங்கிப் பார்க்க உதவும். இந்தியா உட்படப் பல ஆசிய நாடுகளிலும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்கு நாடுகளிலும் ‘நேரடி ‘த்Continue reading “விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் ஹாங்காங் தேர்தலும்”