அச்சு வழிபாட்டின் பாரம்பரியம் மு. இராமனாதன் First published in Kalachuvadu, October 2007 கண்ணனின் தமிழ் ஊடகங்கள் குறித்த உரையை ஆர்வத்தோடு வாசித்தேன். அதில் ஓரிடத்தில் தமிழில் திரைப்பட நட்சத்திரத்துக்காகத் தொடங்கப்பட்ட முதல் இதழ் ‘ரஜினி ரசிகன்’ என்று அவர் நினைப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அச்சு ஊடகங்கள் மூலமாக நடைபெற்று வரும் நட்சத்திர வழிபாட்டை 15-20 ஆண்டுகளுக்குள் குறுக்கிவிட முடியும் என்று தோன்றவில்லை. அது நீண்ட பாரம்பரியமுள்ளது. எழுபதுகளில் சிவாஜி ரசிகர்களுக்காகவே நடத்தப்பட்ட பல இதழ்களை வாசித்திருக்கிறேன்.Continue reading “ஓர் எதிர்வினை”
Author Archives: Mu Ramanathan
தெய்வம் ஹாங்காங் வந்தது
மு இராமனாதன் First published in Thinnai on Thursday July 5, 2007 பிரம்மனுக்கு நான்கு தலைகள் மகிஷாசுரமர்த்தினிக்கு பதினாறு கரங்கள் கலியுகக் கடவுளுக்கோ கரங்கள் ஆயிரம். நல்லுலகிற்கு வெளியேயும் தமிழ் கூறப்படுவதை தெய்வம் அறியும். அவர்களை ஆட்கொள்வது தம் கடனென்றும். மாருதங்களையும் சமுத்திரங்களையும் தாண்டி சில நூறு கரங்கள் நீண்டன. திருக்கரமொன்று ஹாங்காங் வந்தது. பக்கத்து ஊர்களிலிருந்தும் பக்தர்கள் திரண்டனர். கோயில் வாசலில் தோரணங்கள் போஸ்டர்கள் தெய்வத்தின் படம் பொறித்த டி ஷர்டுகள் லட்சார்ச்சனைகள்.Continue reading “தெய்வம் ஹாங்காங் வந்தது”
சார்க்: போகுமிடம் வெகு தூரமுண்டு!
மு. இராமனாதன் First published in Dinamani on Tuesday, June 19, 2007 சார்க்’ (தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு) வெறும் “பேச்சு மடம்’ என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. “சார்க்’ கூட்டமைப்பு 1985 முதல் இயங்கி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு, இலங்கை ஆகிய ஏழு நாடுகள் அணி சேர்ந்தன. “சார்க்’ ஒரு பொருளாதார ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பாகத்தான் உருவாக்கப்பட்டது. பரஸ்பர அரசியல் கருத்து வேற்றுமைகள் “சார்க்’ அமைப்பிற்குள் வரலாகாது என்றும்Continue reading “சார்க்: போகுமிடம் வெகு தூரமுண்டு!”
YIFC: Tamil Class 3rd Annual Day-Felicitation
இவர்களைப் பாராட்டாமல் யாரைப் பாராட்டுவது! [ஹாங்காங் இளம் இந்திய நண்பர்கள் குழு, மாணவர்களுக்குத் தமிழ் வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்தத் தமிழ் வகுப்புத் திட்டத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா, 26 மே 2007 அன்று கைஃபாங் நலச் சங்க அரங்கில் நடை பெற்றது. அது போது மு.இராமனாதன் வழங்கிய பாராட்டுரை] அன்பு நெஞ்சங்களுக்குத் தலை வணங்குகிறேன்! இந்தத் தமிழ் வகுப்புகள் மூன்று ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறது. இந்த நிறைவை ஒரு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்றுContinue reading “YIFC: Tamil Class 3rd Annual Day-Felicitation”
ஹாங்காங் தமிழ் வகுப்பு: மூன்று ஆண்டுகள், நான்கு திறன்கள்
மு இராமனாதன் இப்ராகிம் ஹாங்காங்கிற்கு வந்து ஒரு வருடமாகிறது. காயல்பட்டினம் மத்திய மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆறாம் வகுப்பு முடித்த கையோடு ஹாங்காங் எல்லிஸ் கடோரி அரசு மேனிலைப் பள்ளியில் முதல் படிவத்தில்(ஏழாம் வகுப்பு) சேர்ந்து விட்டான். பள்ளியில் ஆங்கிலமும், பிரெஞ்சும் கூடவே கொஞ்சம் சீனமும் படிக்கிறான். ஆனால் தமிழ் படிக்காமல் அவன் பெற்றோருக்கு சமாதானம் ஆகவில்லை. YIFCஇன் தமிழ் வகுப்பிற்கு விண்ணப்பித்தான். அமைப்பாளர்கள் தரப்படுத்தியதில் சுலபமாக உயர்நிலை வகுப்பில் பொருந்தினான். உயர்நிலை வகுப்பு ஏகதேசம் ஐந்தாம் வகுப்பிற்குContinue reading “ஹாங்காங் தமிழ் வகுப்பு: மூன்று ஆண்டுகள், நான்கு திறன்கள்”
இணையம்: பலவீனமான வலை
மு இராமனாதன் First published in Thinnai on Thursday, February 1, 2007 டிசம்பர் 27. கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு அலுவலகத்திற்கு வந்த லியுங் சீ விங் எப்போதும் போல் தன் கணினியைத் துவக்கினார். ஹாங்காங்கின் ஏற்றுமதி நிறுவனமொன்றில் பணியாற்றும் லியுங்கிற்கு, தென் கிழக்காசிய நாடுகளின் தகவல் தொழில்நுட்பம் பேரிடர் ஒன்றை நேரிடவிருக்கிறது என்பது அப்போது தெரியாது. அவருக்கு அன்று நிறைய வேலைகள் இருந்தன. இணையத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களின் நடப்பு விலையைப் பார்த்துவிட்டு, வட அமெரிக்காவில்Continue reading “இணையம்: பலவீனமான வலை”
கொரிய தீபகற்பமும் அணு ஆயுத அரசியலும்
மு. இராமனாதன் First published in Kalachuvadu, January 2007. அக்டோபர் 9ஆம் தேதியன்று வடகொரியா பூமிக்கடியில் நிகழ்த்திய அணு ஆயுதச் சோதனை எழுப்பிய அதிர்வு ரிக்டர் அளவீட்டில் 4.2ஆக இருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறது அமெரிக்காவின் நில அமைப்பியல் துறை. இதை வைத்து வடகொரியா சோதித்த அணுகுண்டு, 1945இல் ஹிரோஷிமாவில் வெடித்த அணுகுண்டைவிட 20 மடங்கு சிறியதாக இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இது ஒப்பீட்டளவில் பலவீனமானதுதான். ஆனால் இந்தச் சோதனை வடகிழக்காசியாவின் பாதுகாப்பிலும் அமெரிக்காவின் செல்வாக்கிலும் சர்வதேசContinue reading “கொரிய தீபகற்பமும் அணு ஆயுத அரசியலும்”
உலகம் கவனிக்கும் ஒரு பயணம்
மு. இராமனாதன் First published in Dinamani on Monday, November 20, 2006 சீன அதிபர் ஹூ ஜின்டாவ் நவம்பர் 20 முதல், 4 தினங்களுக்கு இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். இதற்கு முன்பு சீன அதிபர் இந்தியா வந்தது பத்தாண்டுகளுக்கு முன்பு – 1996இல். சீனப் பிரதமர் வென் ஜியோபோ, 2005 ஏப்ரலில் மேற்கொண்ட இந்தியப் பயணத்திற்கு 20 மாதங்களுக்குப் பிறகு வருகிறார் ஹூ. ராஜீய உறவுகளில் இரு தேசத் தலைவர்கள் பரஸ்பரம் மாறி மாறிப்Continue reading “உலகம் கவனிக்கும் ஒரு பயணம்”
ஐ நா: இந்தியாவின் அவசியமற்ற போட்டி
மு. இராமனாதன் First published in Dinamani on Tuesday, October 17, 2006 ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலர் கோஃபி அன்னானின் பதவிக்காலம் இந்த ஆண்டோடு முடிகிறது. அடுத்த பொதுச் செயலராகப் பொறுப்பேற்கப் போகிறார் தென் கொரியாவின் வெளியுறவு அமைச்சர் பான் கி மூன். அக்டோபர் 9 அன்று ஐ.நா.வின் பாதுகாப்பு மன்றம் (Security Council) பான்-ஐத் தேர்ந்தெடுத்தது. 191 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் குழு இந்தத் தேர்வை வழிமொழிந்தது. பானுக்கு அடுத்த இடத்தில்Continue reading “ஐ நா: இந்தியாவின் அவசியமற்ற போட்டி”
தாய்லாந்து: அரசியலில் ராணுவம்
மு இராமனாதன் First published in Thinnai, Friday October 6, 2006 செப்டம்பர் 19, செவ்வாய்க்கிழமை. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. தாய்லாந்தின் தலை நகர் பாங்காக் வீதிகளில் பீரங்கி வண்டிகள் மெதுவாக முன்னேறின. அரசின் தலைமையகத்தையும் வானொலி-தொலைக்காட்சி நிலையங்களையும் வளைத்தன. ஒரு தோட்டா போலும் வெடிக்கவில்லை. ஒரு துளி ரத்தம்கூட சிந்தப்படவில்லை. ராணுவத் தளபதி சோந்தி பூன்யராட்கிளின் ஆட்சியைக் கைப்பற்றியதாக அறிவித்தார். 18 மாதங்களுக்கு முன்னர் இரண்டாவது முறையாக பெருவாரியான வாக்குகளைப் பெற்று பிரதமராகியிருந்தContinue reading “தாய்லாந்து: அரசியலில் ராணுவம்”