பார்வையற்றோரைப் புறக்கணிக்கும் தேசம்

மு. இராமனாதன் Published in The Hindu – Tamil, 29 September 2014 கல்வியும் தொழில்நுட்பமும் பார்வையற்றோருக்கு இரண்டு கண்களாக இருக்க முடியும்.சுகன்யா. இந்தியாவின் லட்சக்கணக்கான பார்வையற்ற பெண்களில் ஒருவர். மழை பொய்த்த ராமநாதபுர மாவட்டத்தில் இன்னும் பேருந்துகள் போகத் தொடங்கியிராத ஒரு குக்கிராமம் அவரது ஊர். எளிய விவசாயக் குடும்பம். படிப்பில் அவருக்கு இருந்த ஆர்வத்தின் முன்னால் இவை எதுவும் தடையாக இல்லை. பக்கத்து ஊர்களில் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். மதிப்பெண்கள் குவிந்தன.Continue reading “பார்வையற்றோரைப் புறக்கணிக்கும் தேசம்”

உலகின் தொழிற்சாலை ஆகுமா இந்தியா?

மு. இராமனாதன் Published in The Hindu – Tamil, 25 September 2014 மனிதவளம் இருந்தால் மட்டும் போதாது; வாழ்க்கைத் தரமும் முக்கியம்.உலகின் புகழ்பெற்ற தொழிலதிபர்கள் இன்று புதுடெல்லியில் கூடியிருக்கின்றனர். “வாருங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்” என்று அவர்களிடம் அழைப்பு விடுக்கிறார் பிரதமர் மோடி. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் உலகெங்கும் உலா வர வேண்டும் என்கிற தனது கனவை, செங்கோட்டையில் நிகழ்த்திய சுதந்திர தின உரையில் பிரதமர் தெரிவித்தார்.இப்போது இந்தியாவில் அந்நிய நிறுவனங்கள் அதிகமாக நிறுவியிருப்பவைContinue reading “உலகின் தொழிற்சாலை ஆகுமா இந்தியா?”

ஹாங்காங் தமிழர்கள் காட்டும் வழி

மு. இராமனாதன் Published in The Hindu – Tamil, 11 August 2014 குழந்தைகளுக்குத் தமிழுணர்வை ஊட்டுவதை ஹாங்காங் தமிழர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்!தாய்மொழிக் கல்வியின் மகத்துவத்தை உலகெங்கும் உள்ள மொழியியல் அறிஞர்கள் உரக்கச் சொல்லிவருகிறார்கள். என்றாலும், ஆங்கில மோகத்தில் திளைக்கும் இந்தியத் தமிழர்களின் செவிகளில் அது விழுவதில்லை. தமிழை இரண்டாம் பாடமாகக்கூடப் படிக்காத ஒரு தலைமுறை தமிழ்நாட்டு நகரங்களில் உருவாகிவிட்டது.ஆனால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் கணிசமானோர் தமது பாரம்பரியத்தின் வேர்கள் தாய்மொழியில் இருப்பதை உணர்ந்திருக்கிறார்கள். அதனால், தமதுContinue reading “ஹாங்காங் தமிழர்கள் காட்டும் வழி”

மவுலிவாக்கம் விபத்து: பொறியியலும் பாதுகாப்பும்

மு. இராமனாதன் Published in The Hindu – Tamil, 23 July 2014 இந்தியாவில் கட்டிடங்கள் கட்டுவதில் உள்ள குளறுபடிகளைப் பற்றி ஹாங்காங் பொறியாளரின் அலசல்.மவுலிவாக்கம் விபத்துகுறித்துச் செய்தி வெளியிட்ட ஹாங்காங் நாளிதழ் ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’, ‘கட்டிடங்கள் இடிந்து விழுவது இந்தியாவில் சாதாரணம்’ என்று எழுதியது. அதை நிரூபிப்பதுபோல், மவுலிவாக்கத்திலிருந்து மீட்புக் குழுவினர் வெளியேறிக்கொண்டிருந்தபோது திருவள்ளூர் அருகே ஒரு சேமிப்புக் கிடங்கின் சுற்றுச்சுவர் இடிந்து 11 பேர் உயிரிழந்தனர். மவுலிவாக்கம் விபத்து நிகழ்வதற்குச் சிலContinue reading “மவுலிவாக்கம் விபத்து: பொறியியலும் பாதுகாப்பும்”

ஒலிம்பிக் பந்தம்: அரசியலும் தேசப்பற்றும்

மு இராமனாதன் First published in Vaarththai, June 2008 கவ்லூன் பூங்கா ஹாங்காங்கின் நடுநாயகமான பகுதியில் அமைந்திருக்கிறது. ஓராண்டுக்கு முன்னால் பூங்காவில் நிறுவப்பட்டது அந்தக் கடிகாரம். அது காலத்தை முன்னோக்கிக் காட்டுவதில்லை. ஒலிம்பிக் விளையாட்டுகள் துவங்குவதற்கு இன்னும் எத்தனை தினங்கள் இருக்கிறது என்பதை நாள்தோறும் குறைத்துக் காட்டிக் கொண்டே வரும்.  மே  2ஆம் தேதி ’98 தினங்கள்’ என்று அறிவித்தது கடிகாரம். அன்று பகல்  வெளிச்சம் மங்கலாக இருந்தது. மெல்லிய  தூறலும்  சேர்ந்து கொண்டது. இவையெதுவும்  நகரின்  பிரதான சாலைகளின் இருமருங்கும்Continue reading “ஒலிம்பிக் பந்தம்: அரசியலும் தேசப்பற்றும்”

தெய்வம் ஹாங்காங் வந்தது

மு இராமனாதன் First published in Thinnai on Thursday July 5, 2007 பிரம்மனுக்கு நான்கு தலைகள் மகிஷாசுரமர்த்தினிக்கு பதினாறு கரங்கள் கலியுகக் கடவுளுக்கோ கரங்கள் ஆயிரம். நல்லுலகிற்கு வெளியேயும் தமிழ் கூறப்படுவதை தெய்வம் அறியும். அவர்களை ஆட்கொள்வது தம் கடனென்றும். மாருதங்களையும் சமுத்திரங்களையும் தாண்டி சில நூறு கரங்கள் நீண்டன. திருக்கரமொன்று ஹாங்காங் வந்தது. பக்கத்து ஊர்களிலிருந்தும் பக்தர்கள் திரண்டனர். கோயில் வாசலில் தோரணங்கள் போஸ்டர்கள் தெய்வத்தின் படம் பொறித்த டி ஷர்டுகள் லட்சார்ச்சனைகள்.Continue reading “தெய்வம் ஹாங்காங் வந்தது”

சார்க்: போகுமிடம் வெகு தூரமுண்டு!

மு. இராமனாதன் First published in Dinamani on Tuesday, June 19, 2007 சார்க்’ (தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு) வெறும் “பேச்சு மடம்’ என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. “சார்க்’ கூட்டமைப்பு 1985 முதல் இயங்கி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு, இலங்கை ஆகிய ஏழு நாடுகள் அணி சேர்ந்தன. “சார்க்’ ஒரு பொருளாதார ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பாகத்தான் உருவாக்கப்பட்டது. பரஸ்பர அரசியல் கருத்து வேற்றுமைகள் “சார்க்’ அமைப்பிற்குள் வரலாகாது என்றும்Continue reading “சார்க்: போகுமிடம் வெகு தூரமுண்டு!”

ஹாங்காங் தமிழ் வகுப்பு: மூன்று ஆண்டுகள், நான்கு திறன்கள்

மு இராமனாதன் இப்ராகிம் ஹாங்காங்கிற்கு வந்து ஒரு வருடமாகிறது. காயல்பட்டினம் மத்திய மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆறாம் வகுப்பு முடித்த கையோடு ஹாங்காங் எல்லிஸ் கடோரி அரசு மேனிலைப் பள்ளியில் முதல் படிவத்தில்(ஏழாம் வகுப்பு) சேர்ந்து விட்டான். பள்ளியில் ஆங்கிலமும், பிரெஞ்சும் கூடவே கொஞ்சம் சீனமும் படிக்கிறான். ஆனால் தமிழ் படிக்காமல் அவன் பெற்றோருக்கு சமாதானம் ஆகவில்லை. YIFCஇன் தமிழ் வகுப்பிற்கு விண்ணப்பித்தான். அமைப்பாளர்கள் தரப்படுத்தியதில் சுலபமாக உயர்நிலை வகுப்பில் பொருந்தினான். உயர்நிலை வகுப்பு ஏகதேசம் ஐந்தாம் வகுப்பிற்குContinue reading “ஹாங்காங் தமிழ் வகுப்பு: மூன்று ஆண்டுகள், நான்கு திறன்கள்”

இணையம்: பலவீனமான வலை

மு இராமனாதன் First published in Thinnai on Thursday, February 1, 2007 டிசம்பர் 27. கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு அலுவலகத்திற்கு வந்த லியுங் சீ விங் எப்போதும் போல் தன் கணினியைத் துவக்கினார். ஹாங்காங்கின் ஏற்றுமதி நிறுவனமொன்றில் பணியாற்றும் லியுங்கிற்கு, தென் கிழக்காசிய நாடுகளின் தகவல் தொழில்நுட்பம் பேரிடர் ஒன்றை நேரிடவிருக்கிறது என்பது அப்போது தெரியாது. அவருக்கு அன்று நிறைய வேலைகள் இருந்தன. இணையத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களின் நடப்பு விலையைப் பார்த்துவிட்டு, வட அமெரிக்காவில்Continue reading “இணையம்: பலவீனமான வலை”

கொரிய தீபகற்பமும் அணு ஆயுத அரசியலும்

மு. இராமனாதன் First published in Kalachuvadu, January 2007. அக்டோபர் 9ஆம் தேதியன்று வடகொரியா பூமிக்கடியில் நிகழ்த்திய அணு ஆயுதச் சோதனை எழுப்பிய அதிர்வு ரிக்டர் அளவீட்டில் 4.2ஆக இருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறது அமெரிக்காவின் நில அமைப்பியல் துறை. இதை வைத்து வடகொரியா சோதித்த அணுகுண்டு, 1945இல் ஹிரோஷிமாவில் வெடித்த அணுகுண்டைவிட 20 மடங்கு சிறியதாக இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இது ஒப்பீட்டளவில் பலவீனமானதுதான். ஆனால் இந்தச் சோதனை வடகிழக்காசியாவின் பாதுகாப்பிலும் அமெரிக்காவின் செல்வாக்கிலும் சர்வதேசContinue reading “கொரிய தீபகற்பமும் அணு ஆயுத அரசியலும்”