பதிவு: தில்லித் தமிழ்ச் சங்கம், புதுதில்லி, 25.02.2012 வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை: தமிழின் பெருமைமிகு படைப்பு மு. இராமனாதன் First published in Kalachuvadu, April 2012 தில்லித் தமிழ்ச் சங்கமும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து நடத்திய “வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை- கவித்தொகை – சீனாவின் சங்க இலக்கியம்” என்னும் நூலின் வெளியீட்டு விழா பிப்ரவரி 25 அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில் நடந்தது. இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் நூலை வெளியிட்டார்.Continue reading “வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை: தமிழின் பெருமைமிகு படைப்பு”
Category Archives: Articles
பன்னிரண்டு சிறுகதைகளும் ஒரு வாசகனின் மதிப்புரையும்
பன்னிரண்டு சிறுகதைகளும் ஒரு வாசகனின் மதிப்புரையும் மு. இராமனாதன் பேராசிரியர் கா. சிவத்தம்பி ஒரு முறை சொன்னார்: ‘தமிழின் மேன்மை, அதன் தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில் இருக்கிறது’. இது ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பிற்கும் பொருந்தும். 1970இல் தொடங்கி ஆண்டு தோறும் தெரிவு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகை நூலை வெளியிட்டு வருகிறது இலக்கியச் சிந்தனை. மழை, புயல், சூறைக்காற்று என்று எது வந்தாலும் மாதத்தின் கடைசி சனிக்கிழமை மாலையில் ஆழ்வார் பேட்டை சீனிவாச காந்தி மண்டபத்தில் இலக்கியச் சிந்தனையின்Continue reading “பன்னிரண்டு சிறுகதைகளும் ஒரு வாசகனின் மதிப்புரையும்”
கடவுச் சொற்களும் வரிசை எண்களும்
மு. இராமனாதன் First published in Thinnai on March 6, 2011 இந்தக் கணினி யுகத்தில் தகவல்கள் எல்லாம் கையெட்டும் தூரத்தில் அல்லது கை சொடுக்கும் கால அவகாசத்தில் உள்ளன. ஆனால், அவற்றை அடைவதற்குக் காவலாக நிறுத்தப்பட்டிருக்கும் கடவுச் சொல்லை (password) முதலில் கடந்தாக வேண்டும். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால், நாங்கள் கோவை தொழில்நுட்பக் கல்லுரி(Coimbatore Institute of Technology- CIT) மாணவர்களாக இருந்தபோது உலகம் கணினிமயம் ஆகவில்லை. இணையம் உருவாகவில்லை. ஆதலால் கடவுச்Continue reading “கடவுச் சொற்களும் வரிசை எண்களும்”
அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்-5 -ஆ. இரா. வேங்கடாசலபதி
மு இராமனாதன் First published in Thinnai on March 20, 2009 ஆ. இரா. வேங்கடாசலபதி ஒரு தமிழறிஞரா? இந்த மண்ணில் பல தமிழறிஞர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள், பலர் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் எந்தத் தமிழ் மரபிலிருந்து வந்தவர்களோ, அதே மரபின் வழி வந்தவர்தான் வேங்கடாசலபதி . அவர்களெல்லாம் தமிழ் மொழியின் மீதும் தமிழ்ச் சமூகத்தின் மீதும் எந்த அளவிற்கு அக்கறையும் ஈடுபாடும் கொண்டிருந்தார்களோ, அதற்கு நிகரான அக்கறையும் ஈடுபாடும் கொண்டவர். வேங்கடாசலபதி சென்னைContinue reading “அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்-5 -ஆ. இரா. வேங்கடாசலபதி”
ஒலிம்பிக் பந்தம்: அரசியலும் தேசப்பற்றும்
மு இராமனாதன் First published in Vaarththai, June 2008 கவ்லூன் பூங்கா ஹாங்காங்கின் நடுநாயகமான பகுதியில் அமைந்திருக்கிறது. ஓராண்டுக்கு முன்னால் பூங்காவில் நிறுவப்பட்டது அந்தக் கடிகாரம். அது காலத்தை முன்னோக்கிக் காட்டுவதில்லை. ஒலிம்பிக் விளையாட்டுகள் துவங்குவதற்கு இன்னும் எத்தனை தினங்கள் இருக்கிறது என்பதை நாள்தோறும் குறைத்துக் காட்டிக் கொண்டே வரும். மே 2ஆம் தேதி ’98 தினங்கள்’ என்று அறிவித்தது கடிகாரம். அன்று பகல் வெளிச்சம் மங்கலாக இருந்தது. மெல்லிய தூறலும் சேர்ந்து கொண்டது. இவையெதுவும் நகரின் பிரதான சாலைகளின் இருமருங்கும்Continue reading “ஒலிம்பிக் பந்தம்: அரசியலும் தேசப்பற்றும்”
ஓர் எதிர்வினை
அச்சு வழிபாட்டின் பாரம்பரியம் மு. இராமனாதன் First published in Kalachuvadu, October 2007 கண்ணனின் தமிழ் ஊடகங்கள் குறித்த உரையை ஆர்வத்தோடு வாசித்தேன். அதில் ஓரிடத்தில் தமிழில் திரைப்பட நட்சத்திரத்துக்காகத் தொடங்கப்பட்ட முதல் இதழ் ‘ரஜினி ரசிகன்’ என்று அவர் நினைப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அச்சு ஊடகங்கள் மூலமாக நடைபெற்று வரும் நட்சத்திர வழிபாட்டை 15-20 ஆண்டுகளுக்குள் குறுக்கிவிட முடியும் என்று தோன்றவில்லை. அது நீண்ட பாரம்பரியமுள்ளது. எழுபதுகளில் சிவாஜி ரசிகர்களுக்காகவே நடத்தப்பட்ட பல இதழ்களை வாசித்திருக்கிறேன்.Continue reading “ஓர் எதிர்வினை”
தெய்வம் ஹாங்காங் வந்தது
மு இராமனாதன் First published in Thinnai on Thursday July 5, 2007 பிரம்மனுக்கு நான்கு தலைகள் மகிஷாசுரமர்த்தினிக்கு பதினாறு கரங்கள் கலியுகக் கடவுளுக்கோ கரங்கள் ஆயிரம். நல்லுலகிற்கு வெளியேயும் தமிழ் கூறப்படுவதை தெய்வம் அறியும். அவர்களை ஆட்கொள்வது தம் கடனென்றும். மாருதங்களையும் சமுத்திரங்களையும் தாண்டி சில நூறு கரங்கள் நீண்டன. திருக்கரமொன்று ஹாங்காங் வந்தது. பக்கத்து ஊர்களிலிருந்தும் பக்தர்கள் திரண்டனர். கோயில் வாசலில் தோரணங்கள் போஸ்டர்கள் தெய்வத்தின் படம் பொறித்த டி ஷர்டுகள் லட்சார்ச்சனைகள்.Continue reading “தெய்வம் ஹாங்காங் வந்தது”
சார்க்: போகுமிடம் வெகு தூரமுண்டு!
மு. இராமனாதன் First published in Dinamani on Tuesday, June 19, 2007 சார்க்’ (தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு) வெறும் “பேச்சு மடம்’ என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. “சார்க்’ கூட்டமைப்பு 1985 முதல் இயங்கி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு, இலங்கை ஆகிய ஏழு நாடுகள் அணி சேர்ந்தன. “சார்க்’ ஒரு பொருளாதார ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பாகத்தான் உருவாக்கப்பட்டது. பரஸ்பர அரசியல் கருத்து வேற்றுமைகள் “சார்க்’ அமைப்பிற்குள் வரலாகாது என்றும்Continue reading “சார்க்: போகுமிடம் வெகு தூரமுண்டு!”
ஹாங்காங் தமிழ் வகுப்பு: மூன்று ஆண்டுகள், நான்கு திறன்கள்
மு இராமனாதன் இப்ராகிம் ஹாங்காங்கிற்கு வந்து ஒரு வருடமாகிறது. காயல்பட்டினம் மத்திய மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆறாம் வகுப்பு முடித்த கையோடு ஹாங்காங் எல்லிஸ் கடோரி அரசு மேனிலைப் பள்ளியில் முதல் படிவத்தில்(ஏழாம் வகுப்பு) சேர்ந்து விட்டான். பள்ளியில் ஆங்கிலமும், பிரெஞ்சும் கூடவே கொஞ்சம் சீனமும் படிக்கிறான். ஆனால் தமிழ் படிக்காமல் அவன் பெற்றோருக்கு சமாதானம் ஆகவில்லை. YIFCஇன் தமிழ் வகுப்பிற்கு விண்ணப்பித்தான். அமைப்பாளர்கள் தரப்படுத்தியதில் சுலபமாக உயர்நிலை வகுப்பில் பொருந்தினான். உயர்நிலை வகுப்பு ஏகதேசம் ஐந்தாம் வகுப்பிற்குContinue reading “ஹாங்காங் தமிழ் வகுப்பு: மூன்று ஆண்டுகள், நான்கு திறன்கள்”
இணையம்: பலவீனமான வலை
மு இராமனாதன் First published in Thinnai on Thursday, February 1, 2007 டிசம்பர் 27. கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு அலுவலகத்திற்கு வந்த லியுங் சீ விங் எப்போதும் போல் தன் கணினியைத் துவக்கினார். ஹாங்காங்கின் ஏற்றுமதி நிறுவனமொன்றில் பணியாற்றும் லியுங்கிற்கு, தென் கிழக்காசிய நாடுகளின் தகவல் தொழில்நுட்பம் பேரிடர் ஒன்றை நேரிடவிருக்கிறது என்பது அப்போது தெரியாது. அவருக்கு அன்று நிறைய வேலைகள் இருந்தன. இணையத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களின் நடப்பு விலையைப் பார்த்துவிட்டு, வட அமெரிக்காவில்Continue reading “இணையம்: பலவீனமான வலை”